எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப். 10 தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதி நீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடுவர் மன்றத்தின் உத்தரவு சரியாக அமல் படுத்தப்படுகிறதா என்பதை மேற்பார்வையிடுவதற்காக கடந்த 2013- ஆம் ஆண்டு காவிரிக் கண்காணிப்புக் குழுவை உச்சநீதிமன்றம் உரு வாக்கியது.

மத்திய நீர்வளத் துறை அமைச்சகசெயலாளர்தலை மையிலான இந்த கண்காணிப் புக் குழுவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச் சேரிஆகிய 4 மாநிலதலை மைச் செயலாளர்கள் உறுப்பி னர்களாக உள்ளனர்.

காவிரியில்தண்ணீர்திறப் பது தொடர்பாக தமிழ்நாட் டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பிரச்சினை ஏற் படும் போதெல்லாம் இந்த கண்காணிப்புக் குழு கூடி பிரச்சினையை தீர்த்து வைக் கும். இதுவரை 5 தடவை காவிரி கண்காணிப்புக் குழு கூடி பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது.

எனவே தற்போது தமிழ கம், கர்நாடகம் இடையே காணப்படும்தண்ணீர்திறப்பு பிரச்சினைகுறித்தும் கண் காணிப்புக்குழுவைநாடும் படிஉச்சநீதிமன்றம்அறி வுறுத்தியது.அதன்பேரில் தமிழ்நாடும், கர்நாடகாவும் காவிரி கண்காணிப்புக் குழு வில் மனுதாக்கல் செய்துள்ளன. இதைத் தொடர்ந்து காவிரி கண்காணிப்புக் குழு டில்லி யில் வரும் 12- ஆம் தேதி (திங்கட்கிழமை) 6- ஆவது முறையாக கூடும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்படும். இதற்காக கர்நாடகா அணைகளில்தற் போது தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை அறிய நிபுணர் குழு அனுப் பப்படும் என்று தெரிகிறது.

அந்த குழு நேரில் ஆய்வு செய்த பிறகு தமிழ்நாட்டுக்கு காவிரியில் இன்று தற்காலிக தீர்வாக எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்பது தெரிய வரும்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner