எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரிமங்கலம், மார்ச் 14- காரிமங் கலம் அருகே மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே புகுந்து நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:-

தருமபுரி மாவட்டம் காரி மங்கலம் ஒன்றியம் அடிலம் சப்பாணிப்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் குடமுழுக்கு நடை பெற்றது. அது முதல் கோவிலின் பூசாரியாக கன்னிப்பட்டியை சேர்ந்த சேட்டு என்பவர் இருந்து வருகிறார். வழக்கமாக வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிவரை காலை, மாலையில் பூஜைகள் நடைபெறும்.

இதேபோல் நேற்று முன்தினம் மாலை கோவிலில் பூஜைகளை முடித்து சேட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலை கோவில் வழி யாக சென்ற ஊர் பொதுமக்கள்  சிலர் கோவிலின் கதவு உடைக்கப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து கோவிலின் முன்பு பொதுமக்கள் திரண்டனர். பின்னர் ஊர் தலை வர் ராமச்சந்திரன் முன்னிலையில் கோவிலில் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் வைக்கப் பட்டிருந்து 2 உண்டியல்கள் மற் றும் சாமி கழுத்தில் இருந்த தங்க தாலிகளை காணாது அதிர்ச்சி அடைந்தனர். இதை சில நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து காரி மங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதை யடுத்து அங்கு வந்த காரிமங்கலம் காவல்துறை ஆய்வாளர் சதீஷ் குமார் மற்றும் காவல்துறையினர் கோவிலுக்குள் சென்று பார்வையிட்டனர்.

அப்போது பொதுமக்கள் கோவில் அருகில் உள்ள ஒரு வரது விவசாய நிலத்தில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப் பதையும், அதிலிருந்த பணம் திருட்டு போயிருப்பதையும் காவல்துறையினரிடம் தெரிவித் தனர். இதைத்தொடர்ந்து அங்கு சென்று உண்டியலை கைப்பற்றிய காவல்துறையினர் ஊர் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பூசாரி சேட்டுவிடம் விசாரித்தனர்.

இந்த திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் திருடியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவி லில் திருட்டுபோன தங்கதாலி மற்றும் பணத்தின் மதிப்பு பற்றிய முழுவிவரம் உடனடியாக தெரிய வில்லை.

ஆனாலும் இந்த திருட்டு குறித்து ஊர் தலைவர் ராமச்சந் திரன் கூறும்போது "கோவில் குட முழுக்கு நடந்து 2 ஆண்டாக உண்டியலை திறக்கவில்லை. அதனால் உண் டியலில் சுமார் ரூ. 3 லட்சம் மற்றும் தங்க நகைகள் இருந்திருக்கும். சாமி கழுத்தில் இருந்த தங்க தாலிகள் 3 பவுன் எடையுள்ளதாக இருந்தது" என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner