எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 14 அறிவியல் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளில்  ஆர்வமுடன் ஈடுபடும் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், தமிழ் நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழகத் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

சென்னை மேற்கு தாம்பரம் சிறீசாய் ராம் பொறியியல் கல்லூரியில் புதன் கிழமை நடைபெற்ற திட்ட மாதிரி கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது:

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்வி பயின்றவர்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களில் புதிய கண்டுபிடிப் புகளை உருவாக்கும் ஆர்வமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை மிகவும்  குறைவாக உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

பள்ளிப் பருவத்தில்  மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சித் திறனை ஊக்கு விக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப் படுகின்றன.

அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கை களுக்கு உறுதுணைபுரியும் ஆசிரியர் களை ஊக்குவித்து, ரூ 5 லட்சம் வரை நிதி உதவி பெற வகை செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்கா, ரசியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் 68 முறை கலன்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால்   ஒரு தடவை நிலவுக்கு நாம்  அனுப்பிய கலன் மூலம் அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தோம்.  தனித்துவத் தொழில் நுட்பம் மூலம் சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.

உயர்ந்த குறிக்கோளை வாழ்வின் லட்சியமாகக் கொண்டு சாதனை படைக்கும் நோக்குடன் உழைத்தால் நீங்களும் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற முடியும் என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த மாதிரி படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து, முதல்வர் சி.வி.ஜெயக்குமார், ஆய்வுத் துறைத் தலைவர் ஏ.ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner