எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.22 தென்னிந்தியாவின் முன்னணி மக்கள் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான - சென்னையைச் சேர்ந்த கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இரண்டு அகில இந்திய விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.

பப்ளிக் ரிலேஷன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா  எனப்படும் மக்கள் தொடர்பு நிறுவனங்களுக்கான தேசியக் கவுன்சில் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களைத் தேர்வு செய்து விருதுகளை வழங்குகிறது.

அதில், இந்த ஆண்டு ஊடகங்களுடனான தொடர்பை பயன் படுத்தும் பாங்கு மற்றும் புதுமையான சிந்தனை மற்றும் படைப்பாற்றலில் உன்னதம்   ஆகிய பிரிவுகளின் கீழ் கேட்டலிஸ்ட் பி.ஆர். நிறுவனத்துக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

2019-ஆம் ஆண்டுக்கான இவ்விருதுகள், அண்மையில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மணிப்பால் பல் கலைக் கழக வளாகத்தில் நடந்த மக்கள் தொடர்பு நிறுவனங்களுக்கான தேசியக் கவுன்சிலின் வருடாந்திர மாநாட்டில் வழங்கப்பட்டன.

இவ்விருது பெற்றது குறித்து இந்நிறுவனத்தின் இயக்குநர்  இராம்குமார் சிங்காரம் கூறுகையில்,  நாங்கள் எப்போதும் எல்லாத் தரப்பினருடனும் இணக்கமான உறவைப் பேணிப் பாதுகாத்து வந்துள்ளோம். நாங்கள் பயணித்து வரும் பாதை சரியானதுதான் என்பது மீண்டும் ஒருமுறை தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner