எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.22 இளம் தொழில்முனை வோருக்கும், புதிய நிறுவனங்களுக்கும் உதவும் வகையிலும், ஆராய்ச்சி தொழில்நுட்ப ஆலோசனை களை வழங்கும் வகையிலான புதிய திட்டத்தை சென்னை அய்அய்டி அறிமுகம் செய்துள்ளது.

சென்னை அய்அய்டி-யின் ஆராய்ச்சிப் பூங்காவில் இடம்பெற்றிருக்கும் மேலாண்மைத் துறை பேராசிரியர் ஏ.தில்லைராஜனின் யோனோஸ் என்ற நிறுவனம் இந்தத் திட்டத்தை வடிவமைத்திருக்கிறது. இதுகுறித்து சென்னை அய்அய்டி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:- டெல்ஃபி எனப் பெயரிடப் பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், சென்னை அய்அய்டி-யை அணுகும் இளம் தொழில் முனை வோருக்கு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கான ஆலோசனைகளும்,  உதவிகளும் செய்து தரப்படும். ஆலோசனைக் குழுவில் சென்னை அய்அய்டி பேராசிரியர்களும் இடம் பெற்றிருப்பர். குறிப்பாக சென்னை அய் அய்டி, டில்லி, அய்தராபாத், ரோபர், மாண்டி, பாலக்காடு அய்அய்டி-க்களின் பேராசிரியர்கள், பெங் களூரு அய்அய்அய்டி பேராசிரியர்கள், காஞ்சிபுரம் அய்அய்டிடிஎம், திருச்சி, வாரங்கல், ராய்ப்பூர் என். அய்.டி.க்கள் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 128 பேராசிரியர்கள் இந்தத் திட்டத்தில் உறுப்பி னர்களாக இடம்பெற்றிருக்கின்றனர் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner