எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.22  பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாண வர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்க்க, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில்  நடை பெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:-

தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாண வர்களின் மென்திறன் மேம் பாடு, ஆங்கில மொழி பேச்சுத் திறன் வளர்த்தல், வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத் துதல், நூலகத்தின் பயன் பாட்டை அதிகரித்தல், கலை மற்றும் பண்பாட்டு திறன் பகிர்வு ஆகியவற்றை வளர்க்க தமிழக அரசு முடிவு செய் துள்ளது. இதற்காக, தமிழக அரசுக் கும், சென்னையில் உள்ள பிரிட் டிஷ் கவுன்சிலுக்கும் இடையே முதல்வர் பழனிசாமி முன்னி லையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் ஜனகா புஷ்பநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner