எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வல்லம், பிப்.10, பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 30ஆவது சாலை பாதுகாப்பு வார விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு பற்றிய போட்டிகள்

07.02.2019 அன்று பல்கலைக்கழக மாண வர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி  ஆகியவை நடைபெற்றது. இதில் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு 08.02.2019 அன்று பரிசளிப்பு விழாவும், சாலை பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கமும் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பல்கலைக்கழக மாணவர் நல மய்ய இயக்குநர் பேராசிரியர் சி.வி.சுப்ர மணியன் அனைவரையும் வரவேற்றார். எம்.கமலக்கண்ணன் (முன்னாள் முதன்மை பாதுகாப்பு காப்பாளர்) அவர்கள் இந்நிகழ்ச்சியை பற்றி எடுத்துக்கூறும்பொழுது இன்று சாலை விபத்துகள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந்த சாலை விபத்துக் களை குறைப்பதற்காகவே மாணவர்களாகிய உங்களிடையே சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற் காகவே இந்நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது.

மாணவர் களாகிய நீங்கள் இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களாக இருந்தால் தாங்கள் அவசியம் ஓட்டுநர் உரிமம் பெற்று தங்களுடைய வாகனத்தை ஓட்ட வேண்டும் என்றும் மேலும் பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவது குறித்தும் எடுத்துரைத்தார். தலைமையுரையாற்றிய  என்.கார்த்தி கேயன் (வட்டாரப் போக்குவரத்து அலுவலர்) அவர்கள் உரையாற்றும் போது, சென்ற ஆண்டுகளில் சாலை விபத்துகள் அதிகமாக இருந்தது. இன்று சாலை விபத்துகள் குறைந்து உள்ளது. மேலும் விபத்துகளை தவிர்ப்பதற்கான மூன்று முக்கியமான கல்வி அறிவு, பொறியியல் மற்றும் வாகன இயக்கு தலை பற்றி தெரிந்திருக்கவேண்டும். இதை மீறும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை காவல் துறையால் எடுக்கப்படுகிறது.

ஓட்டுநர் பொறுமை யுடனும் விட்டுக்கொடுக்கும் மனப் பான்மையுடன் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  சிறப்புரையாற்றிய பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர் வேல் அவர்கள் உரையாற்றும் போது, வாகன ஒட்டுநர்கள் 18 வயது இருந்தால் எல்லோருமே ஒட்டுநர் உரிமம் பெறு வதற்கு தகுதியுடை யவர்கள். முதலில் கற்பவர்களுக்கு உரிமம் பெற வேண்டும் பின்னர் நிரந்தர உரிமம் ஒரு மாதம் கழித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு வாகன ஒட்டுநர்களும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். 1980 ஆம் ஆண்டு சாலை பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.

ஆகையால் ஓட்டுநர்கள் உத்தரவு சின்னம், எச்சரிக்கை சின்னம் மற்றும் தகவல் சின்னம் ஆகியவை நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து கட்டுரைப் போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை வல்லம் காவல் நிலைய ஆய்வாளர்கள் வள்ளி, ஜெயமோகன் மற்றும் பல்கலைக்கழக கல்வியில் துறை தலைவர் பேரா.க.மோகன சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித் தனர். நிறைவாக கல்வியியல் துறை பேரா செ.அனுசுயாபிரியா நன்றியுரை ஆற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner