எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 18- பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை இணையதளத் தில் கண்காணிக்க அங்கன்வாடி பணி யாளர்களுக்கு மார்ச் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் கைப்பேசிகளை வழங்க ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 54,439 அங் கன்வாடி மய்யங்கள் செயல் பட்டு வரு கின்றன. இந்த மய்யங்களை அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவியா ளர்கள் நிர்வகித்து வருகின்றனர். அவர் கள் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவ கல் வியை வழங்கி வருகின்றனர். மேலும் வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய் மார்களுக்கு இணை உணவு வழங்குவதுடன், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் அங்கன் வாடி மய்யங்கள் மூலம் செயல் படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் அந்தந்த மாநில அரசுகளும் நிதியுதவி வழங்கி வருகின்றன.

இந்தத் திட்டங்கள் பொதுமக் களுக்கு முழுமையாக சென்றடைவ தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. எனவே, அங்கன்வாடி மய்யங் களை கண்காணிக்க இணையதளம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

அங்கன்வாடி பணியாளர்கள் மேற் கொள்ளும் சிறிய பணிகள்கூட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள் ளன. இதற்காக, ரூ.10 ஆயிரம் மதிப் புள்ள ஸ்மார்ட் கைப்பேசிகளை ஊழி யர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட் டது. தற்போதைக்கு சென்னை, விழுப் புரம், அரியலூர், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பணிபுரியும் அங்கன் வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசி வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் பணிபுரியும் பணியா ளர்களுக்கு அடுத்த மாதம் தொடக்கத் தில் ஸ்மார்ட் கைப்பேசி வழங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பணிபுரியும் 50 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசிகளை மார்ச் மாதம் இறுதிக்குள் வழங்க ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மார்ச் மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கைப்பேசிகள் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் கைப்பேசி மூலம் இணைக் கப்பட்ட புதிய இணையதளத்தில் அங் கன் வாடியை திறந்தவுடன் ஊழியர்கள் உள்நுழைய வேண்டும். அதன் பிறகு, திட்டங்களை செயல்படுத்தியவுடன் அந்தந்தப் பயனாளிகளின் புகைப் படத்துடன் ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

டில்லியில் இருந்து மத்திய அரசு அதிகாரிகள் இதனை கண் காணிக்கும் பணியில் ஈடுபடுவார் கள். இதன் மூலம், மக்களுக்கு அங்கன்வாடி திட் டங்கள் முழு மையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படும். இந்தத் திட்டத்தை வரும் ஏப்ரல் மாதம் முதல் முழு வீச்சில் செயல்படுத்த திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner