எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன.12 சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள மகளிர் நல அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங் களுக்கு ஜனவரி 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்ட சமூக நலத் துறைக் கட்டுப்பாட்டின்கீழ், மகிளா சக்தி கேந்திரா என்ற திட்டத்தில் காலி யாக உள்ள மகளிர் நல அலுவலர் பணியிடத்துக்கும், இரண்டு மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.

மகளிர் நல அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்போர் 35 வயதுக்கு உள்பட்ட மகளிராக இருக்க வேண்டும். சமூகப் பணி, மனிதநேயம் பாடப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றிருப்பதுடன், கணினி அறிவும், சமூகம் சார்ந்த அமைப்புகளில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 35 வயதுக்கு உள்பட்ட மகளிராக இருக்க வேண்டும். சமூகப் பணி, மனிதநேயம் பாடப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கி லத்தில் புலமை பெற்றிருப்பதுடன், கணினி அறிவும், பெண்கள் பிரச்சினை களைப் பற்றி அறிந்தவராக இருக்க வேண்டும்.

ஜன.14-க்குள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பதாரர் கள் தங்களது அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய கையொப்பமிட்டு, விலாசமிட்ட அஞ்சல் உறையுடன் ஜனவரி 14 ஆம் தேதிக்குள் சென்னை மாவட்ட சமூகநல அலுவலகம், 8ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலன் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வழங்கலாம்.

மேலும், விவரங்களுக்கு 044 25264568 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner