எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன.12 தென் மாவட் டங்களுக்குச் செல்லும் பயணி களின் வசதிக்காக, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல் வேலிக்கு சுவிதா சிறப்புரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து மார்ச் 8-ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில்(82601) புறப் பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மறுமார்க்க மாக, திருநெல்வேலியிலிருந்து மார்ச் 10-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82602) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்த டையும்.

செங்கோட்டையில் இருந்து மார்ச் 5-ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82610) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடை யும். இதுபோல, சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத் துக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner