எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 12- தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை.

கஜா புயல் காரணமாக சில மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. கடந்த சில ஆண்டுகளாகவே நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்த நிலையில் தற்போது வட கிழக்கு பருவ மழை போதிய அளவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 20 மாவட்டத் தில் நிலத்தடி நீர் குறைந்து இருக்கிறது. அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 4.32 மீட்டருக்கு நிலத்தடி நீர் மட்டம் கீழே சென்றுள்ளது.

அங்கு 2017-ஆம் ஆண்டு 6.74 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கணக்கின்படி 11.06 மீட்டரில் நிலத்தடி நீர் சென்று விட்டது.

இதேபோல் திருவண்ணா மலை, சேலம், தர்மபுரி, அரிய லூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களி லும் பெருமளவு நிலத்தடி நீர் கடந்த ஒரு ஆண்டில் மிகவும் கீழே சென்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து ஆய்வில் தெரி விக்கப்படவில்லை. ஆனால் சென்னையில் வடகிழக்கு பரு வமழை 55 சதவீதம் குறைவாக பெய்து இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து இருக்கவே வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற கோடை காலத்தில் குடிநீர் தட் டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கோவை, ஈரோடு, மதுரை போன்ற மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் அம்மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 2017ஆ-ம் ஆண்டு 15.59 மீட்ட ரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 2018ஆ-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.34 மீட்டராக உள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் அதிகபட்சமாக 3.25 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நீள்ளது.

இது தொடர்பாக தெற்கா சிய நீர் ஆய்வு ஒழுங்கு முறை கூட்டமைப்பு தலைவர் கனக ராஜன் கூறியதாவது:-

நிலத்தடி நீர் மட்டம் உய ராததற்கு பருவமழை சரியாக பெய்யாதது காரணமல்ல. நாம் நிலத்தடி நீர் உயர்வதற்கு நட வடிக்கை எடுக்கவில்லை. 80 சதவீதம் மழை தண்ணீர் நிலத் தடிக்கு செல்லாமல் நிலத்தி லேயே சென்று விடுகிறது.

நீர் நிலைகளில் மழை தண் ணீரை சேமிக்காத வரை நிலத் தடி நீர்மட்டம் உயராது. நமது நீர் நிலைகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.

இதனால் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் வறண்டு பாலைவனமாகும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக் கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner