எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 11-  தமிழகத்தில் மார்ச் மாதம் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித்தேர்வர்கள் பங்கேற்க  வசதியாக 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 14ஆம் தேதி போகிப் பண்டிகையை முன் னிட்டு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

அதனால் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தனித் தேர்வர்கள் (செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் உட்பட) 18ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதிகளில் இணையதளம் மூலம் விண் ணப்பிக்க கால அவகாசம் நீட் டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இது தவிர கடந்த டிசம்பர் 15ஆம் தேதி நடந்த தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வுக்கான இறுதி விடைக்குறியீடு மேற்கண்ட இணைய தளத்தில் இன்று வெளியாகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner