எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விசாரணை ஆணைய தலைவர் தகவல்

கோயம்புத்தூர், நவ. 9- கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு வந்துள்ளேன். 3 நாட்கள் விசாரணை நடத்தப்படும். 14.9.2018 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 31 ஆம் தேதி வரை மனுக்கள் பெறப் பட்டது. மேற்கு மண்டலத் தில் 247 மனுக்கள் வந்துள்ளன. 56 மனுக்கள் கோவையிலிருந்து வந்துள்ளன. 3 நாட்களும் கோவை மாவட்டம் மட்டும் தான் விசாரிக்கப்படவுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக எந்த வழக்காக இருந்தாலும் விசாரிக்க வேண்டியுள்ளது எனது பணியாகும். மாதம் 12 முறை வந்து வழக்குகள் விசாரிக்கப்படும். கோவை 56, நீலகிரி 11, ஈரோடு44, திருப்பூர் 40, சேலம் 50, நாமக்கல் 16, கரூர் 3, திண்டுக்கல் 27, வத்தலக்குண்டு 1 என 248 மனுக்கள் பெறப்பட்டன.

கோவை முடித்தவுடன் அடுத்தடுத்த மாவட்டங்களில் விசாரிக்கப்படும். கால அவகாசம் கொடுக்கப்பட வில்லை. இருந்தாலும் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு விரைவாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜல்லிக்கட்டு விசாரணை கால தாமதம் என சொல்வது தவறு.

உண்மையை கண்டுபிடிக்க விசாரணை ஆணையம் உள்ளது. விசாரணை ஆணையம் கண்துடைப்பு என்பது விசாரணை ஆணை யத்தின் அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 547 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக தொடரப்பட்டதால். எங்களை போன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு விசாரணையை முடிக்க 6,7 மாதங்கள் ஆகும். மதுரையில் டிசம்பர் மாதம் முடிவடையும். 1956 சாட்சியங்கள் விசாரிக்க வேண்டியுள்ளதால் இந்த காலம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner