எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர், செப். 14- டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா சாகுபடிக்கான உழவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டங்களில் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரப்பப் படாமலும், வாய்க் கால்கள் தூர்வாரப்படாமலும் இருப்பதாலும் கடைமடை பகுதிகளுக்கு இதுவரை தண் ணீர் செல்லாமல் உள்ளது. இத னால் போர்வெல் பாசனத்தின் மூலம் விவசாயிகள் பயிர்க ளுக்கு தண்ணீர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தஞ்சை மாவட்டத் தில் கக்கரை, கூவத்தூர், திரு மங்கல கோட்டை, திருநல்லூர், தெற்கு கோட்டை, வடக்கு கோட்டை உள்ளிட்ட பகுதி களில் பகல் நேரத்தில் 1 மணி விட்டு விட்டு ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மின்வெட்டு இருந்து வருகிறது. இதனால் தற்போது பயிர் செய்யப்பட் டுள்ள சம்பா பயிர்கள் வாடிய நிலையில் காணப்படுகிறது.

தண்ணீர் இல்லாமல் தவித்த விவசாயிகள் இப்போது மின்சாரத்துக்கும் ஏங்கும் நிலை உள்ளது.

தஞ்சை நகர் பகுதிகளில் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது.

அதேநரத்தில் கிராமப்புறங் களில் 1 முதல் 2 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படு கிறது. இதனால் பள்ளி, கல்லூ ரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமல் தவித்து வருகின் றனர்.

இரவு நேரங்களிலும் திடீர் திடீரென மின்வெட்டு இருப்ப தால் குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை கடந்த 4 நாட் களாக அவதி அடைந்து வரு கின்றனர்.

இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி. திருத்துறைப்பூண்டி, முத்துப் பேட்டை, பேரளம், குடவா சல், நன்னிலம், நீடாமங்கலம் ஆகிய கிராமங்களில் தினமும் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

குறிப்பாக முத்துப்பேட்டை பகுதியில் பகல் நேரத்தில் அடிக்கடி மின்தடை செய்யப் படுகிறது. இதனால் பாதிக்கப் பட்ட வர்த்தக சங்கத்தினர் மின்வாரிய செயற்பொறியா ளரை நேரில் சந்தித்து தடையின்றி மின்சாரம் வழங்க கோரி மனு கொடுத்தனர்.

நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், பொறை யாறு, வேதாரண்யம், மயிலாடு துறை உள்ளிட்ட பகுதிகளில் தினமும் 2 மணி நேரம் மின் சாரம் நிறுத்தம் செய்யப்படு கிறது.

குறிப்பாக டெல்டா மாவட் டங்களில் பல பகுதிகளில் அதிகபட்சமாக தினமும் 6 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வரு கிறார்கள்.

இதனால் வியாபாரிகள் மட்டுமல்லாமல், கடைமடை விவசாயிகளும் விழிபிதுங்கி தவித்து வருகிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner