எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை,செப்.14 - தமிழ்நாட் டில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தொட ரப்பட்ட வழக்கு ஒன்றில், நாடு முழுவதும் எத்தனை எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ள்ளது. அதில் எத்தனை வழக் குகள் முடிவுக்கு வந்துள்ளன. எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பன போன்ற விவரங்களை மத்திய அரசிடம் நீதிபதிகள் கேட்டிருந்தனர்.

இதற்கு பதில் அளித்து மத்திய அரசு தாக்கல் செய்த பிர மாணப் பத்திரத்தில், மாநிலங் களில் ரூ.7.8கோடி செலவில் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. செவ்வாயன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க 11 மாநிலங்கள் அறிவிக்கைகள் வெளியிட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்தது.தமிழ்நாட்டில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தமிழக அரசு கடந்த 6 ஆம் தேதியன்று உத்தரவிட்டது. உள் துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி இதற்கான அரசாணையை பிறப் பித்தார். இது விரைவு நீதிமன்றம் போல் சிறப்பு நீதிமன்ற மாக இயங்கும்.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வழக் குகள் இந்த சிறப்பு நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்டு வரு கின்றன. தனி நீதிமன்றத்தை அமைப்பதற் கான இடம் தேர்வாகி வருகிறது. தனி நீதிபதி நியமன அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று அரசு வட்டாரத்தில் தெரி விக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் வழக் குகள் நாள்தோறும் விசாரிக்கப் படும். தமிழ்நாட்டில் பல்வேறு நீதி மன்றங்களில் 178 எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதில் 324 வழக்குகள் கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப் பட்டது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அதிக வழக்குகளை கொண்டு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner