எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூர், ஆக.9 திமுக தலைவர் கலைஞரின் மறை வையொட்டி, வேலூரில் அவ ரது உருவத்தை பல நூறு கிலோ பூக்களைக் கொண்டு மலர் ஓவியம் வரைந்து வியா பாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவர் கலைஞர் உடல் நலக்குறைவால் உயிரி ழந்ததை அடுத்து அவருக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக வேலூரில் அனைத்துக் கடை களும் புதன்கிழமை அடைக்கப் பட்டிருந்தன. நேதாஜி அங் காடியில் உள்ள காய்கறிக் கடைகள், பூக்கடைகள், பல சரக்குக் கடைகளும் முழுமை யாக அடைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, கலைஞர் மறைவுக்கு வேலூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் திமுக வினர், வியாபாரிகள், பொது மக்கள் மரியாதை செலுத்தினர்.

நேதாஜி அங்காடி முன் பல நூறு கிலோ பூக்களைக் கொண்டு கலைஞரின் உருவத்தை இரு வேறு இடங்களில் மிகப்பெரிய மலர் ஓவியமாக வரைந்து வியா பாரிகள் மரியாதை செலுத்தினர். இதேபோல், மாநகர திமுக அலுவலகத்தில் கலைஞரின் உருவப்படத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மத்திய மாவட்டத் தலைவர் பி.எஸ். பழனி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத் தினர். மேலும், வேலூர் அண் ணா சாலை உள்பட மாநகரின் பல்வேறு சாலைகளிலும் கலைஞரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏராளமான பேனர்களும் வைக் கப்பட்டிருந்தன.

வேலூர் மாநகரம் மட்டு மின்றி மாவட்டம் முழுவதும் கலைஞரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner