எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 11 தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கு இனி பட்டதாரிகளும் விண்ணப்பிக் கலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத் தின் இயக்குநர் க.அறிவொளி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறு வனம், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஆரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்  ஆகியவற்றில், தொடக்கக் கல்விப் பட்டயப் படிப்பு 2018- - 2019 -ஆம் ஆண்டுக் கான சேர்க்கைக்கு கடந்த ஜூன் 18 -ஆம் தேதி முதல் ஜூன் 30 -ஆம் தேதி வரை இணையதளத்தில்  விண் ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப் பட்டது.

இதற்கு 821 பேர் விண்ணப் பித்தனர். பெறப்பட்ட விண்ணப் பங்களில் 713 தகுதியுள்ள விண் ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டு, அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதில், 413 மாண வர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதை அரசு ஆய்வு செய்ததில், கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தினால், இப்பள்ளிகளில் கற்றல் விளை வுகள் மேம்பட வாய்ப்புள்ளது என முடிவெடுக்கப்பட்டது.

எனவே, இளநிலை, முது நிலை பட்டப் படிப்பு முடித்து, ஒன்றாம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விருப்பமுள்ளவர்கள் இரண்டாண்டு (ஞி.ணிமி.ணிபீ- ஞிவீஜீறீஷீனீணீ வீஸீ ணிறீமீனீமீஸீtணீக்ஷீஹ் ணிபீuநீணீtவீஷீஸீ) பட்டயப் படிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் வகுத்துள்ள விதிமுறை களின்படி சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள வர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதள முகவரியில் (ஷ்ஷ்ஷ்.tஸீsநீமீக்ஷீt.ஷீக்ஷீரீ)   ஜூலை 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner