எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 11 தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத் திலும் முன்னோடி களாக விளங் கும் மூவாயிரம் ஆண்டுப் பேரா ளுமைகளைத் தமிழாற்றுப்படை என்ற வரிசை யில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக் கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்.

18ஆம் படைப்பாகக் கலிங்கத் துப்பரணி இயற்றிய செயங் கொண்டார் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி அரங்கேற்றுகிறார். ஜூலை 12 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராசர் அரங்கத்தில் விழா நடைபெறுகிறது.

தமிழக அரசின் முன்னாள் டில்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். மரபின் மைந்தன் முத்தையா முன்னிலை வகிக்கிறார்.

செயங் கொண்டார் உருவப் படத்திற்குத் தமிழன்பர்கள் மலர் தூவி மரியாதை செய்கிறார்கள்.

ஜூலை 13 கவிஞர் வைர முத்துவின் பிறந்தநாளாகும். தன் ஒவ்வொரு பிறந்தாளிலும் சிறந்த கவிஞர் ஒருவருக்குக் கவிஞர்கள் திருநாள் விருது வழங்கி வருகிறார் கவிஞர் வைரமுத்து. இந்த ஆண்டு கவிஞர்கள் திரு நாள் விருது மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கப்படுகிறது. 25,000 ரூபாய் ரொக்கமும், ஒரு பட்டயமும் சால்வையும் கொண்டது அந்த விருது.

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பொன்மணி மாளிகையில் ஜூலை 13ஆம் தேதி காலை 10மணிக்குப் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner