எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 11- திரா விடர் கழகம் சார்பில், “மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை - ஒருபார்வை” எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடை பெறுகிறது.

நாளை (12.7.2018)வியாழக் கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னை - பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெறும் இக் கருத்தரங்கிற்கு, தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து சிறப்புரை யாற்றுகிறார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை யாற்றுகிறார்.

தமிழக உயர் கல்விமன்ற முன்னாள் துணைத் தலைவர் முனைவர் அ. இராமசாமி, பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள்துணைவேந்தர் முனைவர் பெ.ஜெகதீசன், சென்னைப் பல்கலைக் கழக அஞ்சல் வழிக் கல்வி நிறுவன முன்னாள் இயக்குநர் முனைவர் மு.சண்முகம், `பொதுப் பள்ளி களுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கருத்து ரையாற்றுகின்றனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner