எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 13 தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 6 -ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டும் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்தையும் நீட் தேர்வின் அடிப்படையில் மாநில அரசே நிரப்ப உள்ளது. இதன் காரணமாக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே விண்ணப்பங்கள் விநியோகம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறுகிறது.

இதுதவிர, இணையதளத்திலும் விண்ணப்பங் களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner