எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 13 இந்தியா வில் தயாரித்த உதிரிபாகங்களுடன் அடுத்த 4 ஆண்டுகளில் 40 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன், நேற்று முன்தினம் (11.6.2018) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு கடந்த 6ஆம் தேதி, இஸ்ரோவுக்கு ரூ10 ஆயி ரத்து 400 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இஸ்ரோ வரலாற்றில் இந்த ளவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தது கிடையாது.

இந்த நிதி மூலம், 30 ஜிஎஸ்எல்வி ராக்கெட், 10 கனரக ஜிஎஸ்எல்வி ராக்கெட் என மொத்தம் 40 ராக்கெட்டுகள் உரு வாக்குவதற்கு பயன்படுத்தப் படும். இதன் மூலம் நம் நாட்டுக்கு, 2 விதங்களில் நன்மைகள் கிடைக்கும். பல ஆயிரக்கணக்கான இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அதாவது, இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகும். குறிப்பாக சிறிய கிராமங்கள்கூட ஸ்பீடு இணையதள மய்யமாக மாறும். அதோடு, விவசாயத்திற் காக நவீன செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுவதால் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும். மேலும், இந்த 40 ராக்கெட்டுகளும் அடுத்த 4 ஆண்டுகளில் தயா ராகும். இதனால் அன்னிய செலாவணி மிக பெரிய அளவில் நம் நாட்டுக்கு சேமிப்பாகும். ஏனென்றால், இந்த ராக்கெட்டு களுக்கான உதிரி பாகங்கள் அனைத்தும் நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட இருக்கின்றன.

இதனால் தொழிற்சாலைகளில் தொழில் வளர்ச்சி ஏற்படும். மீனவர்களுக்கு தேவையான உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கேரளா மீனவர்களுக்கு 500 உபகரணங் களும், தமிழக மீனவர்களுக்கு 200 உபகரணங்களும் கொடுப்பதற்கு இஸ்ரோ தயாரித்து தயார் நிலை யில் வைத்துள்ளது. தற்போது மீன்பிடி தடைகாலம் உள்ளதால் அதை மீனவர்களுக்கு உடனடி யாக வழங்க முடியவில்லை. தடை காலம் முடிந்ததும் உப கரணங்கள் விநியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டு இறுதிக்குள் சந்திரயான் -2 ஜி-சாட் 29, ஜி-சாட் 31 ஆகிய செயற்கைக்கோள்களை இந்தாண்டுக்குள் விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறோம். இதுதவிர 2 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. சந்திர னுக்கு அனுப்பும் சந்திராயன் -2 என்ற ராக்கெட்டும் திட்டமிட்ட படி சரியான நேரத்தில் தயாராகி கொண்டிருக்கிறது.

இந்தாண்டு இறுதிக்குள் சந்தி ரனுக்கு சந்திரயான் -2 செலுத் தப்படும் என்றார் அவர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner