எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசுப் பள்ளியை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும், தனியார் பள்ளிகளை கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில்மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள பள்ளிக் கல்வி அலுவலகங்களை முற்றுகையிட்டு நேற்று (ஜூன் 12) ஆவேசப்போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநரக அலுவலகத்தை முற்றுகையிட்டு மாநில செயலாளர் பி.உச்சிமாகாளி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர்

க.நிருபன்,செயற்குழு உறுப்பினர்கள் இசக்கி நாகராஜ், தீ.சந்துரு, தினேஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோரை காவல் துறையினர் கைது செய்தனர். திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner