எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, மே16 திருச்சி பகுதியில் சுற்றலாப் பயணிகளாக, பார்வையாளர் களாக கேரளாவிலிருந்து வருகைதந்த வர்கள், திருச்சி - சிறீரங்கம்   கோயிலைச் சுற்றி பார்த்துள்ளார்கள். கேரளாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் கிறித்தவ மத கன்னியாஸ்திரிகளும் இடம்பெற்றி ருந்தனர். இந்நிகழ்வுகுறித்து திட்டமிட்டு டிவிட் டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந் துத்துவவாதிகள் சிலர் கன்னியாஸ்திரிகள் சிறீரங்கம் ரங்கநாதர் கோயில் பகுதியில் இருக்கின்ற படத்தை வெளியிட்டு, கோயிலுக்குள் கன்னியாஸ்திரிகளால் விவி லியம் வாசிக்கப்பட்டதாக அவதூறு பரப்பினார்கள்.

இதுகுறித்து ”தி டைம்ஸ் ஆப்” இந்தியா நாளிதழில்  தகவல் வெளியாகியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

சிறீரங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் அவதூறுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 9.5.2018 அன்று சுற்றுலா வந்த கன்னியாஸ்திரிகள் சிறீரங்கம் கோயில் பகுதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பகுதியை பார்வையிட்டார்கள். அப்போது, உள்ளூரைச் சேர்ந்த சிலர் படம் எடுத்துள் ளனர். மேலும் வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விவிலியம் வாசிக்கப்படுவ தாகவும், வழிபாட்டுக் கூட்டம் நடத்தப் படுவதாகவும் கோயில் நிர்வாகத்திடம் புகார் கூறினர். அவர்களிடமிருந்து சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கும் நோக்கில், சுற்றுலாவாக வந்த கன்னியாஸ்திரிகளிடம் கோயில் வளாகத்தைவிட்டு வெளி யேறுமாறு கோயில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதையடுத்து, கன்னியாஸ்திரிகள் அப்பகுதியைவிட்டு வெளியேறினார்கள்.

அதேநேரத்தில், ஆயிரங்கால் மண்டபப் பகுதி யாரும் நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதி அல்ல. அப்பகுதியில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுவதில் அடிப்படை ஆதாரமோ, உண்மையோ இல்லை. பல்வேறு மத நம்பிக்கைக் கொண்டவர்கள் பலரும் சிற்பக்கலையால் ஈர்க்கப்பட்டு, நாள் தோறும் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே, இதுபோன்ற குறுகிய எண் ணம் உள்ளவர்களின் போலியான பரப்புரை களால், கோயிலுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையை வெகுவாக பாதிக்கும்

இவ்வாறு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பி.ஜெயராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப் பிட்டுள்ளார். மேலும், அவர் குறிப்பிடுகையில், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகள் சிறீரங்கத்திற்கு வருகைதருகிறார்கள் என்பதற்காகவும், கலாச்சார மரபுகளை காக்கின்ற இடமாக இது உள்ளதாகவும் யுனெஸ்கோ  அமைப்பு 2017ஆம் ஆண்டு விருது அளித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

பல்வேறு மதத்தவர்கள் ஏராளமாக வருகைதரும் நிலையில், திட்டமிட்டு மதவெறியூட்டி, வன்முறைகளை, கலவரங் களை உருவாக்குவதே  வலதுசாரி அமைப் புகளைச் சேர்ந்தவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது என்பதை இந்நிகழ்வு தோலுரித்துக்காட்டியுள்ளது. உரிய நேரத்தில் அவர்களின் முகத் திரையை கிழிக்கும்வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner