எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருச்சி, மார்ச் 13- தமிழ்நாடு முற் போக்கு பெண் வழக்குரை ஞர்கள் சங்கம் கல்வியிலும் சமுதாயப் பணியிலும் சிறந்து விளங்கிய மைக்காக பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா.செந்தா மரை அவர்களுக்கு  பெண் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்துள் ளது.

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் 10.03.2018 அன்று நடத்திய உலக மகளிர் நாள் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்  இரா.நல்லகண்ணு அவர்கள் முனைவர் இரா.செந் தாமரைக்கு பெண் சாதனை யாளர் விருதினை வழங்கி சிறப்பித்தார்கள்.

மேலும் இவ்விழாவில் தமிழர் தேசிய முன்னணி கட் சியின் மூத்த தலைவர் பழ. நெடுமாறன், சென்னை மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி து.அரி பரந்தாமன், பெண்ணுரிமை செயல்பாட்டாளர் தோழர் ஓவியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்ணுரிமை குறித்து சிறப் புரையாற்றினர். சென்னை உயர் நீதி மன்ற  (மதுரை அமர்வு) வழக்கறிஞர் த.பானுமதி அவர் கள் தலைமையில் நடைபெறும் இச்சங்கம் பெண்கள் முன்னேற் றத்திற்காகவும், சமுதாய முன் னேற்றத்திற்காகவும் பாடுபட்டு வரும் பெண் சாதனையாளர் களையும், போராளிகளையும் சிறப்பிக்கும் வண்ணம் இவ் விருதினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந்தா மரை உட்பட 5 நபர்களுக்கு பெண் சாதனையாளர் விருதும் சமுதாய நலனுக்காக பல்வேறு நிலைகளில் எதிர்த்து போரா டிய 5 பெண்களுக்கு போராளி களுக்கான விருதும் வழங்கப் பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முற் போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இ.அங்கயற் கண்ணி, துணைத் தலைவர் வழக்கறிஞர் தமயந்தி மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள் சிறப் பாக செய்திருந்தனர்.

அன்னை மணியம்மையார் அவர்களின் 99-ஆவது பிறந்த நாளில் பெண் சாதனையாளர் விருது பெற்ற முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர் களை கல்லூரியின் பேரா சிரியர்கள் மற்றும் பணியாளர் கள்  பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner