எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருப்பத்தூர், பிப். 13- திருப்பத்தூர் அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கோட்டம் கண் டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலை யில் சுமார் 10 கி.மீ. தொலை வில் வேடியப்பன் நகரில் ஒரே இடத்தில் 6 நடுகல்கள் அமைந் துள்ள நடுகல் கோட்டம் கண் டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆ. பிரபு, சு.சிவசந்திரகுமார் மற் றும் சமூக ஆர்வலர் முத்தமிழ், ஆய்வாளர் பொ.சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கள ஆய்வு மேற்கொண்ட போது இந்த நடுகல் கோட்டத்தைக் கண்டறிந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறி யதாவது: தமிழகத்தின் வட மாவட்டங்களில் நடுகல்களை வேடி வட்டம், வேடியப்பன் கல், வேடிக்கல், வேடர் கல் என்று அழைக்கின்றனர். வேட் டையாடுபவரைக் குறிக்கும் வேடர், வேட்டுவர் என்ற சொற்களின் திரிபே வேடி என்ற அழைக்கப்படுகிறது. அவ்வகை யில் வேடியப்பன் நகர் எனும் இச்சிற்றூரின் எல்லையில் பழைமையான அழிஞ்சி மரங் கள் சூழ்ந்த பகுதியில் இந்த நடுகல் கோட்டம் அமைந்துள் ளது.

இங்கு மொத்தமாக 6 நடு கல்களும், சிற்பமற்ற ஒரு கல் லும் கண்டெடுக்கப்பட்டுள் ளன. ஒவ்வொரு நடுகல்லிலும் வீரர்களது உருவங்கள் வடிவ மைக்கப்பட்டுள்ளன. வீரர்க ளின் ஒரு கையில் வில்லும், மறு கையில் அம்பும் உள்ளன. வில்லில் இருந்து அம்பைச் செலுத்தும் காட்சி மிகச் சிறப் பாக வடிவமைக்கப்பட்டுள் ளது. இந்த வட்டார மக்கள் இந்த நடுகல்களை வேடியப் பன் என்றே அழைக்கின்றனர். விழாக் காலங்களில் ஆடு, கோழிகளைப் பலியிட்டு வணங்குகின்றனர். ஒரு வீர னின் முதுகில் அம்பாறாத்தூணி (அம்புக் கூடு) இடம் பெற்று உள்ளது. கழுத்தில் அணிகல னும், கைகளில் பூணும் அணிந் துள்ளனர். 2 வீரர்களது உருவங் கள் முருக்கு மீசையும், இடை யில் சிறிய கத்தியும் இடைக் கச்சும் உள்ளன. நடுகல்களில் 5 கல்கள் பெரிய அளவிலும், ஒன்று மட்டும் சிறிய அளவில் உள்ளன.

இந்த நடுகல்கள் அனைத் தும் ஒரே இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருங்கல்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. அடர்த்தியான நிழல் தரும் பழைமையான அழிஞ்சி மரங் கள் சுற்றிலும் இருக்க நடுவில் இந்த நடுகல்கள் உள்ளன. இந்த இடத்துக்கு சற்றுத் தொலைவில் கல்வீடு அமைப்புடன் கூடிய நடுகல் ஒன்றும் உள்ளது. இதில், நின்ற நிலையில் வலது கரத்தில் வாளுடனும், இடது கையில் வில்லும், முதுகில் அம்புக்கூடுமாக வீரன் உள் ளான். இங்கிருந்து வடமேற்கில் ஆற்றங்கரையோரத்தில் 2 நடு கல்கள் உள்ளன. இவை மண் ணுக்குள் புதைந்த நிலையில் காணப்படுகின்றன.

இந்த நடுகல்கள் யாவும் ஊரைக்காக்கும் போது ஏற்பட்ட போரில் உயிர் துறந்த வீரர்க ளுக்காக எடுக்கப்பட்ட நடுகல் களாகும். இவை விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலமான கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும் என்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner