எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, பிப். 13 மின்வாரிய தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து தொழிலாளர் நலத் துணை ஆணையர் சுமதி தலை மையில் சென்னையில் திங்க ளன்று (பிப். 12) மாலை முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது. கூட் டத்தின் போது அதிகாரிகள் பாதி யிலேயே எழுந்து சென்றதால் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து விட்டது.

பின்னர் தொழிற்சங்கத் தலை வர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், தொழி லாளர் நல ஆணையர், வாரிய அதிகாரிகள், தொழிற்சங்க தலைவர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது. இதனால் திட்ட மிட்டபடி வரும் 16 ஆம் தேதி வேலைநிறுத்தம் நடை பெறும் என்றனர். வரும் 15 ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அழைப்பு விடுத்துள் ளார்.

அவரது அழைப்பை ஏற்று அன்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம். அதிலும் சுமூக தீர்வு காணப்படவில்லை என்றால் ஏற்கெனவே திட்ட மிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அவர்கள் கூறினர். இந்தப் பேச்சுவார்த் தையில் மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் எஸ்.எஸ். சுப் பிரமணியன், எஸ்.ராஜேந்திரன், பிஎம்எஸ் சார்பில் முரளிகிருஷ் ணன், எல்.எல்.ஓ சார்பில் சால மோன், டி.என்.பி.இ.பி சார்பில் அருள் செல்வன் உள்ளிட்ட 10 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner