எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, டிச.7 தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதை அடுத்து தமிழக மீனவர்கள் வரும் டிச. 8-ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் புதன் கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி யில் செவ்வாய்க்கிழமை நிலைகொண் டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி புதன்கிழமை அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தற்போது மசூலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே சுமார் 1,160 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்து வரும் டிச. 8-ஆம் தேதி வரை யில் வடமேற்கு திசையில் ஆந்திர கடற்கரைப் பகுதியை நோக்கி நகரக் கூடும். இதனால் தமிழகப் பகுதிகளில் கனமழை பாதிப்பு இருக்காது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக மீனவர்கள் அடுத்து வரும் 3 நாள்களுக்கு (டிச.8-ஆம் தேதி வரை) வங்கக் கடலின் ஆழ்பகுதிகளுக் குள்ளும், வட தமிழகம், மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டி யுள்ள கடற்பகுதிகளிலும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

மிதமான மழைக்கு வாய்ப்பு: அடுத்து வரும் இரு தினங்களைப் பொருத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை நகரைப் பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றார் எஸ். பாலச்சந்திரன்.

ஆயக்குடியில் - 70 மி.மீ. மழை: புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஆயக்குடியில் - 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner