எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, அக்.12 சென் னையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவ மனையில்  பிறந்து நான்கே நாள் ஆன குழந்தைக்கு இதயத்திலிருந்து நுரையீரலுக்கு ரத் தத்தை கொண்டு செல்லும் குழா யில் ஏற்பட்ட அடைப்பு வெற்றி கரமாக நீக்கப்பட்டுள்ளது.

அந்த குழந்தை பிறக்கும் முன்பே அதற்கு இந்தப்பிரச் சினை இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.  இந்தகுழந் தைக்கு ஏற்பட்ட பிரச்சினையை மருத்துவர்கள்   றிuறீனீஷீஸீணீக்ஷீஹ் ஷிtமீஸீஷீsவீs  என்றுஅழைக்கிறார்கள்.

நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளத் தில் ஏற்படும் அடைப்பு தான் அது. இத்தகைய நிலை பத்து சதவீத இதய பாதிப்பை ஏற் படுத்தும்.

பெரும்பாலான நேரங்களில் இது லேசாக இருக் கும். சில ருக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த குழந் தையின் இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு ரத்தம் செலுத் தப்படும் குழாயில் கடு மையான அடைப்பு இருப்பது கண்டுபிடிக் கப்பட்டவுடன் உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது என்று குழந் தைகளுக்கான இதய பாதிப் பிற்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மூத்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.பிரேம்சங்கர் கூறி னார்.

பிறக்கும் 10 ஆயிரம் குழந் தைகளில் ஒருவருக்கு Pulmonary Stenosisகாணப்படும். இவற்றில் 95 சதவீத குழந்தை களுக்கு உடனடியாக சிகிச் சை அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து இம்மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.ஜி.கோவிந்தராஜன்,  குழந்தைகளின் இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்படும் அடைப்பை உரிய சிகிச்சை மூலமாக நீக்க முடியும் என்பதை பலர் அறியாமல் உள்ளனர்.

6 வயது குழந்தைக்கு நாங்கள் வெற்றிகரமாக திறந்த நிலையில் இதய அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள் ளோம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner