எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, அக். 12- அண்ணா இன்று இருந்திருந்தால் அவர் பாஜகவில் சேர்ந் திருப்பார் என முரளிதரராவ் தெரிவித் திருக்கிறார். அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சூழ் நிலை இன்றைக்கு பாஜகவுக்கும் வந்து விட்டது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத் தில் நேற்று (11.10.2017) மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:

''டாஸ்மாக், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அமைச்சர்கள் மாற்றிய தாக புகார் எழுந்துள்ளது. மின்சார வாரியம், டாஸ்மாக், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக இதுபோன்ற முறைகேடுகள் ஏராளமாக நடந்துள்ளன. முறையான விசாரணை நடந்தால் அனைத்தும் வெளியே வரும். இந்த ஆட்சி நடக்கும் வரை அதற்கான வாய்ப்பில்லை.

அண்ணாமலை பல்கலை.யில் செப் டம்பர் மாதம் முதல் ஊதியம் வழங் கப்படவில்லை. இது மிகவும் கண்டிக் கத்தக்கது. அரசு உடனே உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அதேபோல, இப் போதும் பல பிரச்சினைகளில் வெள் ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், எதற்கும் பதிலில்லை. டெங்கு பிரச்சினையில் மாநில அரசின் அலட் சியம் குறித்து இன்றைக்கு பட்டவர்த் தனமாக சுட்டிக்காட்டி இருக்கிறது. எனவே, முழுமையான விவரங்களுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் தான் உண்மைகள் வெளிவரும்.

அண்ணா இன்று இருந்திருந்தால் அவர் பாஜகவில் சேர்ந்திருப்பார் என முரளிதரராவ் தெரிவித்திருக்கிறார். அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சூழ்நிலை இன் றைக்கு பாஜகவுக்கும் வந்துவிட்டது. அவர்களின் மனதில் அண்ணாவை வைத்து, இன்றைக்கு நினைவுபடுத்திய தற்காக திமுகவின் சார்பில் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கி றேன். ஆனால், கடந்த மூன்றரை ஆண் டுகளாக பிரதமர் மோடி தலைமையில் உள்ள பாஜக ஆட்சி எதையுமே செய்ய வில்லை. இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்தவொரு பயனுமே கிடைக்கவில்லை. எனவேதான், அதையெல்லாம் திசை திருப்பும் வகையில் இப்படிப்பட்ட பிரசாரத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளபோது, அரசின் வருவாயை உயர்த்த மதுபானங்களின் விலையை 12 ரூபாய் வரை உயர்த்த அமைச்சரவை யில் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. படிப்படியாக மதுபானக் கடைகளை மூடுவோம், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று சொன்ன வர்கள் இன்றைக்கு இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட்டு இருப்பதில் இருந்து, எப்படிப்பட்ட முரண்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்ப தற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக நிர்வாகிகளும் டெங்கு பாதிப்பு குறித்து பொது மக்களுக்கும், இந்த அரசாங்கத்துக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆங்காங்கு இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, டெங்கு பாதிப்பு களை எல்லா வகையிலும் கட்டுப்படுத் தக்கூடிய வகையில் உரிய முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண் டும் என அறிவுறுத்தி இருக்கிறோம்'' என்று ஸ்டாலின் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner