எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒக்கநாடு மேலையூர், அக். 12- உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் மன்னைநாராயண சாமி அரசு உயர் நிலைப்பள்ளி யில் திராவிடர் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 29.9.2017 அன்று மாலை ஆறு மணிக்கு இராசகாந்தி இல் லத்தில் நடைபெற்றது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு, ஜாதிஒழிப்பு, பெண்க ளுக்கு சொத்துரிமை போன்ற கொள்கைகள் எங்களுக்கு மிக வும் பிடித்தமானவை என மாண வர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொண்டனர்.

மன்னை நாரயணசாமி அரசு உயர்நிலைப்பள்ளி திராவிடர் மாணவர் கழக புதிய பொறுப் பாளர்களை அறிவித்து திரா விடர் கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பணிமுடிக்க தமிழர் தலைவர் தலைமையில் மாண வர்கள் ஆற்றவேண்டிய பணி களை விளக்கிக் கூறினார்.

பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநிலசெயலாளர் நா. இராமகிருட்டிணன் ஒன்றிய செயலாளர் அ.உத்திராபதி, பெரியார்நகர் மா.மணி, மகேசு வரன், இராசப்பா, உரத்தநாடு நகர செயலாளர் ரெ.இரஞ்சித் குமார், நகர துணைச்செயலாளர் வழக்குரைஞர் க.மாரிமுத்து, பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் மாணவர் கழகத் தலைவர் க.வீரமணி ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள்.கவிபாரதியின் நன்றி நவிலலு டன் கூட்டம் நிறைவடைந்தது.

புதிய பொறுப்பாளர்கள்

ஒன்றிய திராவிடர் மாண வர் கழக அமைப்பாளர் -பா.கவிபாரதி, சண்முகா பாலிடெக் னிக் கல்லூரி அமைப்பாளர், -கா.தமிழினியன், மன்னை தேசிய மேல்நிலைப்பள்ளி தலைவர் -ச.சதீசு, செயலாளர் -சி.சந்தோசு, உரத்தநாடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அமைப்பாளர் -ச.ஸ்டாலின், மன்னை நாராயணசாமி உயர் நிலைப்பள்ளி தலைவர் -செ.இளந்தென்றல், துணைத்தலை வர்- மு.அசய், செயலாளர் கு.தமிழ்ச்செல்வன், துணைச்செய லாளர் -க.பரணிதறீரன், அமைப் பாளர் இரா.எழிலன், உறுப் பினர்கள்- பி.இனியவன், க.சிறீ தரன், ப.பகவத், ப.சிறீதர். ச.பாவேந்தன் ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner