எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பண்ருட்டி, செப், 13- கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கம் மற்றும் பகுத்தறிவு ஆசிரி யரணியின் கலந்துரையாடல் கூட்டம் 3.9.2017 அன்று மாலை 6 மணிக்கு பண்ருட்டி ஜோதி கலர் லேப் முதல் தளத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் வா.நேரு தலைமை யில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.கந்தசாமி வரவேற்றார். மாவட்ட தலைவர் தென்.சிவக் குமார், மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், முன்னாள் மாவட்ட செயலாளரும், ஜோதி போட்டோ ஸ்டியோ உரிமை யாளருமான கோ.புத்தன், மாவட்ட அமைப்பாளர் சி.மணி வேல், மாவட்ட ப.க. செயலா ளர் அரங்க வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, மாநில ப.க.அமைப்பாளர் சி. ரமேசு, மண்டல செயலாளர் சொ.தண்டபாணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண் டவர்கள் விவரம்: மாவட்ட மகளிர் அணி தலைவர் செ. முனியம்மாள், மண்டல இளை ஞரணி செயலாளர் வி.திரா விடன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராம நாதன், பண்ருட்டி நகர தலை வர் ந.புலிக்கொடி, நகர செய லாளர் கோ.காமராஜ், புலவர் சஞ்சீவிராயர், கடலுர்நகர தலைவர் கவிஞர் த.எழிலேந்தி, செயலாளர் இரா.சின்னதுரை, பெரியார் நூலகநிர்வாகி மாத வன், முனைவர் ச.மா.கார்த் திகேயன், சாத்திப்பட்டு இ.அருள், அ.செல்வராஜ், க.திரா விடமணி, க.அமுதா, கு.பிர பஞ்சன், ஆ.பாலமுருகன் ஆகியோராவர்.

புதிய நிர்வாகிகள்

மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்: தலைவர் இரா.கந்த சாமி, செயலாளர் க.எழிலேந்தி, அமைப்பாளர் அரங்க வீரமணி
மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி

மாவட்ட தலைவர் வீ.அரசு, மாவட்ட செயலாளர் தா.கனக ராசு, மாவட்ட அமைப்பாளர்  செல்வராணி குணசேகரன்

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) இரங்கல் தீர்மானம்: சமூகநீதியை சவக்குழியில் தள்ளி, ஒடுக்கப்பட்ட மாணவர் களின் மருத்து கனவை அடி யோடு தகர்க்கும் நீட் தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூர் அனிதா அவர்களுக்கு இக்கூட் டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

2) தந்தை பெரியார் 139 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளை நடத் துவது என தீர்மானிக்கப்படுகிறது.

3) பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணிக்கு அதிக உறுப்பினர்களைச் சேர்ப் பது என தீர்மானிக்கப்படுகிறது.

4) ஜனவரி 5,6,7இல் திருச் சியில் நடைபெறும் உலக நாத் திகர் மாநாட்டில் அதிக பகுத்த றிவாளர்களைக் கலந்து கொள் ளச்செய்வது என தீர்மானிக்கப் படுகிறது.

5) நீட், புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துக்களை விளக்கும் வகையில் ஒரு நாள் கருத்தரங்கம் நடத்துவது என வும் மாதாந்திர கூட்டங்களும் 3 மாதத்திற்கு ஒரு முறை கலந் துரையாடல் கூட்டங்களை நடத் துவது எனத் தீர்மானிக்கப்படு கிறது.

6) இயக்க ஏடுகளான உண்மை, பெரியார் பிஞ்சு, விடுதலை, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் போன்ற இதழ்களுக்கு அதிக சந்தாக்கள் வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner