எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஒசூர், செப். 13- நீட் ஒழிப்பு கூட்டமைப்பு ஓசூர் சார்பில் 10.9.2-017 அன்று மாலை ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அரு கில் நீட் எதிர்ப்பு போராளி அரி யலூர் அனிதாவிற்கு வீரவணக் கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நீட் ஒழிப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருட் டிணகிரி மாவட்ட திராவிடர் கழக இணை செயலாளர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், திமுக சார் பில் நகர செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வரன், கிருட்டிணகிரி மாவட்ட தலைவர் மு.துக்கா ராம், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஓசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் இராமச் சந்திரன். சிபி.எம் ஒன்றிய செய லாளர் வாசுதேவன். டிஒய்எப், ஒன்றிய தலைவர் சிறீதர், காங் கிரஸ் நகர அமைப்பு தலைவர் நீலகண்டன், மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பு குழு தலைவர் நவுஸ்சாத், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆனந்தகுமார், அனைத்து

குடியிருப்போர் நலசங்கம் செயலாளர் சத்தியமூர்த்தி, புதிய ஜனநாயகம் தோழர் சங் கர், தமிழ்வளர்ச்சி மன்றம் தலைவர் குருசாமி, தமிழ்தேச குடியரசு இயக்கம் இரா.தமி ழரசன், இளைஞர் ஒருங்கி ணைப்பு இயக்கம் ஹரிபிரசாத், எஸ்டிபிஅய் மாவட்ட செய்தி தொடர்பாளர் கபீர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, முக மதுகலில், வள்ளுவர் இலக்கிய மன்றத்தின் சார்பில் சிவந்தி அருணாசலம், வீரவணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிர் சார்பில் சித்திரம் ஆகி யோர் உரையாற்றினர். முடிவில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பா ளர் வனவேந்தன் நீட் தேர்வை இந்தியாவில் இருந்து குறிப் பாக தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்கும் வரை எங்கள் கூட் டமைப்பின் போராட்டம் தொட ரும். அடுத்த போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

நீட்க்கு எதிரான கொள்கை முழக்கங்களை கிருட்டிணகிரி மாவட்ட துணைச் செயலாளர் அ.செ.செல்வம், டிஒய்எப்அய் தோழர் சுரேஷ், தமிழ்தேச குடி யரசு இயக்க மாவட்ட செயலா ளர் திருநாவுக்கரசு, டிஎன்எப் எஸ்.விக்னேஷ் ஆகியோர் விண் ணதிர முழக்கமிட்டனர்.
வீரவணக்கம் நிகழ்ச்சி போஸ் டர் நகர் முழுவதும் நடப்பட்டி ருந்ததது. இந்நிகழ்ச்சியில் திரா விடர் கழகம் கிருட்டிணகிரி மாவட்ட மகளிர் அணி தலை வர் செ.செல்வி, செயலாளர் லதாமணி, அமைப்பாளர் பா. கண்மணி, நகர தலைவர் சி.மணி, நகர செயலாளர் தி.பாலகிருட்டிணன், சட்டகல் லூரி மாணவர் வெற்றி, பெரிய £ர் பிஞ்சு நன்மதி மற்றும் கூட் டமைப்பில் உள்ள கட்சியின் பல்வேறு பொறுப்பில் உள்ள வர்கள் திரளாக கலந்து கொண் டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner