எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 13- தகவல் தொடர்பு சேவை நிறுவனமான அய்க் மெசஞ்சர் (Hike Messenger) இந்தியாவில் மூலை முடுக்குகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரி களுக்காக தனித்தன்மை வாய்ந்த ஸ்டிக்கர்களை அறி முகம் செய்துள்ளது.

செப்டம்பர் 12ஆம் தேதியிலிருந்து ஆண்டிராய்ட் மற்றும் அய்.ஓ.எஸ் (IOS) அலைபேசிகளில் அய்க் செயலியில் ஸ்டிக்கர் ஷாப்பிலிருந்து இந்த ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

2018ஆம் ஆண்டுக்குள் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி களுக்கு தனித்தன்மை கொண்ட ஸ்டிக்கர்களை தயாரிக்க அய்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

26 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள கல்லூரி குழுவினரை தனித்தன்மை ஸ்டிக்கர்கள் வாயிலாக இணைக்க அய்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு கல்லூரிக்காகவும் தனித்தனி சிறப்பு ஸ்டிக்கர் பேக்குகள் உருவாக்கப்பட்டன. இதற்கு மாண வர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது என இந் நிறுவன செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner