எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆத்தூர், ஆக.12 தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறை சார்பாக ஆசிரியர் களுக்கு உத்வேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு கைலாஷ் கலைக் கல்லுரியில்  இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் ஒவ்வொரு பயிற்சி முடிவிலும் சிறந்த சிந்தனையாளர்களை அழைத்து ஆசிரியர்கள் தங்கள் பணியில் எவ்வாறு சிறந்து விளங்க வேண்டும் என்று கருத் துகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் தஞ்சை பெரியார் செல்வம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான உரை ஆற் றினார். அவர் தன் உரையில்:

ஆசிரியர்களின் நூல்கள் வாசிப்புத் திறன்  எவ்வாறு இருக்க வேண்டும்,ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உறவு முறை எப்படி இருக்க வேண்டும், மற்றும் தலை வர்களான  பெரியாரும், காமராசரும் நம் மக்களின் படிப்பிற்க்காக எவ்வாறு தியாக மும், தொண்டும் ஆற்றினார்கள் என்பதை மிகவும் உணர்ச்சியுடன் எடுத்து உரைத்தார். இறுதியாக  அவர் தன் உரையில் தற்போது மாணவர்கள் சந்திக்க உள்ளபேரபாயமான நீட் நுழைவுத் தேர்வு குறித்தும் அதன் பாதிப்புகள் குறித்தும், மேலும் மத்திய  அரசு கொண்டு வரும் புதிய கல்வி கொள்கை குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும், பல்வேறு உதாரணங்களுடனும், அதை எதிர் கொள்ள, ஆசிரியர்கள் மாண வர்களை எவ்வாறு  தயார் படுத்த வேண் டும் என்றும் சிறப்பாக எடுத்துரைத்தார். மூன்று கட்டமாக நடந்த இப்பயிற்சியில் 750 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் அரசுப்பள் ளி அறப்பதுகாப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர்  வ.ரவிக்குமார், மற்றும்  ஆசிரியர்கள் சிவகுமார், எழில் மோகன், முனுசாமி, வா.தமிழ் பிரபாகரன், ச.வினோத்குமார், பிரபு, ஆகியோர் முன் னின்று சிறப்புடன் செயல்படுத்தினர்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner