எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 18- மாணவர்கள் தங்கள் பொது அறிவை வளர்த் துக் கொள்ளவும், மொழித் திறன்களை வளப்படுத்திடவும் பள்ளிகளுக்கு நாளிதழ்கள் மற் றும் சிறுவர் இதழ்கள் வழங் கப்படும்.

தமிழக முதல்வரின் உத்திர வின்படி 31322 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இத்திட்டத்திற்கு ரூ. 4.83 கோடி செலவிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து 15.6.2017 அன்று சட்டமன்றத்தில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வரு மாறு:

நூலகங்களுக்கு
புதிய நூல்கள்

அரசு பொது நூலகத்துறை நூலகங்களுக்கு பயனுள்ள மற் றும் தரமான நூல்கள் வாங்கிட ரூ. 25 கோடியும், அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு புதிய, துறை சார்ந்த மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப நூல்கள் வாங்கிட ரூ. 5 கோடி யும் நிதி ஒதுக்கப்படும். இத் திட்டத்திற்கு ரூ. 30 கோடி செலவிடப்படும்.
புத்தகக்கண்காட்சி

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப் படும். இதன் வாயிலாக பொது மக்களிடம் வாசிக்கும் பழக்கம் மேம்படுத்தப்படும். இத்திட் டத்திற்கு ரூ. 3 கோடி செல விடப்படும்.
காட்சிக் கூடங்கள்

தமிழகத்தின் பல்வேறு நக ரங்களில் தனித்தன்மை வாய்ந்த, பொருள் சார்ந்த நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்படும்.

சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரி கங்கள் குறித்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம் சிவ கங்கை மாவட்டம் கீழடியி லும், தமிழிசை, நடனம் மற் றும் நுண்கலைகள் குறித்து தஞ்சாவூரிலும், நாட்டுப்புறக் கலைகள் சார்ந்து மதுரையிலும், தமிழ் மருத்துவம் சார்ந்து திரு நெல்வேலியிலும், பழங்குடியினர் பண்பாடு சார்ந்து திருச் சியிலும், வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் சார்ந்து கோயம்புத்தூரிலும், அச்சுக் கலை சார்ந்து சென்னையிலும் இவை அமைக்கப்படும்.

மேற்கண்ட சிறப்பு நூலகங் கள் மற்றும் காட்சிக் கூட்டங் கள் ஒவ்வொன்றும் ஒரு கோடி செலவில் மொத்தம் ரூ. 8 கோடி செலவில் அமைக்கப் படும்.

தனியார் நூலகங்களுக்கு பாராமரிப்பு நிதி
அரிய வகை நூல்களைப் பேணி பாதுகாக்கும் வகையில் தனியார் அமைப்புகள் நடத்தி வரும் நூலகங்களுக்கு பராம ரிப்பு நிதி வழங்கப்படும். இத் திட்டத்திற்கு ரூ. 25 லட்சம் செலவிடப்படும்.

நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்துதல்

அனைத்து அரசுப் பள்ளி களைச் சார்ந்த மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத் தவும், பொது அறிவினை வளர்க்கவும், எதிர்காலத்தில் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து தகவல்களை பெறுவதற்கும் பள்ளி அளவில் புத்தகக் கண்காட்சி நடத்துதல் அவசியமானதாகும்.

இக்கண்காட்சிகள் புத்தக வெளியீட்டார்களுடன் இணைந்து சுழற்சி முறையில் பள்ளிகளுக்கே செல்லும் வகை யில் நடமாடும் புத்தகக் கண் காட்சிகளாக ஏற்பாடு செய்யப் படும் என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner