எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 19 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க் கையை அதிகரிக்க தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் மோட்டார் சைக்கிள் விழிப் புணர்வு பேரணி நடத்தப்படும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுதொடர்பாக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் இரா.தாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: அரசுப் பள்ளிகளில் மாணவர் களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, எங்களது கூட்ட ணியில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் அனைத்து மாவட் டங்களிலும் உள்ள கிராம, நகர்ப்புறங்களில் மோட்டார் சைக் கிளில் பேரணி யாகச் சென்று பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர். அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் களுக்கு வழங்கப்படும் நலத்திட் டங்கள் குறித்து ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்களை தயார் செய்து வழங்க உள்ளோம். இந்தப் பேரணி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து விரைவில் தொடங்கவுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட நடு நிலைப் பள்ளி, புதிதாகத் தொடங் கப்பட்ட ஆரம்பப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங் களை அனுமதித்து ஒதுக்கீடு செய்து வெள்ளிக்கிழமை (மே 19) முதல் நடைபெறும் கலந்தாய்வில் நிரப்பிட வேண்டும். ஆசிரியர் களை கற்பித்தல் பணி தவிர பிற பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர். முன்னதாக, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் அ.நடராஜன், பொருளாளர் பி.சரவணன் உள் ளிட்டோர் ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக் கைகள் குறித்து பேசினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner