எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அவனியாபுரம், மே 19 ''திருப்பூரில் கன்டெய்னரில் 570 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட தில், முரண்பாடான தகவல்கள் வருகின்றன. இதற்கு சி.பி. அய்., விசாரணை தேவை,'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத் தில் அவர் கூறியதாவது: மருத் துவக் கல்லுரி கல்விக் கட் டணம் வழக்கத்தைவிட, அய்ந்து மடங்கு கூடுதலாக உயர்ந்துள்ளது. மருத்துவ படிப்பில் மாணவர்கள் எண் ணிக்கையை அதிகரிக்க வேண் டும். மருத்துவ படிப்பை வணிக மயமாக செயல் படுத் துகின்றனர். திருப்பூரில், கண் டெய்னரில் 570 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதில், முரண் பாடான தகவல்கள் வருகின் றன. அதற்கு பாதுகாவலர்களாக வந்தவர்கள் ஆந்திராவை சேர்ந் தவர்கள். இதில் அரசியல் அதி கார பலமுள்ளவர்கள் பின்ன ணியில் உள்ளனர். இதற்கு சி.பி.அய்., விசாரணை தேவை.

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கான நிதி, அவர் களுக்கு செலவிடப்படவில்லை. தமிழர்கள் பகுதியில் ராணுவம் விலக்கப்படவில்லை. போரில் காணாமல் போனவர்கள் பற்றி அய்.நா., கண்டு கொள்ள வில்லை. ஆனால்,இலங்கைக்கு இந்தியா துணை நிற்கிறது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner