எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் திடலில்  புத்தகக் காட்சியை கேப்டன் சுரேஷ் திறந்து வைத்தார்

சென்னை, ஏப்.21 சென்னை புத்தக சங்கமத்தின் அய்ந்தாம் ஆண்டு சிறப்புப் புத்தகக் காட்சி தொடக்க விழா சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் இன்று (21.4.2017) காலை தொடங்கியது. அனைத்து புத்தகங்களும் 50% தள்ளு படியில் விற்பனையாகும் இந்த சிறப்புப் புத்தகக் காட்சி இன்று (21.4.2017) முதல் 25.4.2017 முடிய அய்ந்து நாள்கள் நடைபெறுகின்றது.
தொடக்க விழா

சென்னை புத்தகச் சங்கமத்தின் சிறப்புப் புத்தகக் காட்சி தொடக்கவிழா வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் தலைமையில் நடைபெற்றது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில் இந்தி ய கடற்படை அய்.என்.எஸ். அடையாறு தலைமை அதிகாரி கேப்டன் ஜே.சுரேஷ் சென்னை புத்தக சங்கமத்தை திறந்து வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தார்.  விற்பனையில் முதல் புத்தகத்தை  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

தொடக்க விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர் களான கேப்டன் ஜே.சுரேஷ், வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், காந்தி கண்ணதாசன் ஆகியோருக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செய லாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கினார்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் முற்றிலும் குளிர் சாதன வசதி கொண்ட தரைத்தளம், கீழ்த்தளத்தில் அமைக்கப்பெற்றுள்ள 49 அரங்குகளில் 60க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்கள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கேப்டன் ஜே.சுரேஷ், வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், இந்திய பாதுகாப்புத்துறையின் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி டி.சண்முகம், காந்தி கண்ணதாசன், கோ. ஒளிவண்ணன் துணைவேந்தர் பேராசிரியர் நல். இராமச்சந்திரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் அனைத்து அரங்குகளுக்கும் சென்று பார்வையிட்டதுடன் அவரவர் விருப்பத்தேர்வின்படி புத்தகங்களை உரிய தொகை கொடுத்து பெற்றுக் கொண்டார்கள்.

தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், தமிழர் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எழுதிய நூல்கள், சரித்திர நாவல்கள், பன்மொழி அகராதிகள்,  குழந்தைகளுக்கான புத்தகங்கள், தமிழ், ஆங்கில நாவல்கள், அறிவியல் புத்தகங்கள், உலக அறிஞர்களின் நூல்கள், வரலாற்று நூல்கள் என பல்வேறு வகைகளிலும் நூல்கள் பதிப்பகங்கள் வாரியாக அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து புத்தகங்களும் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் அள்ளிச்செல்லும் வாய்ப்பு  சென்னை புத்தகச்சங்கமத்தின் அய்ந்தாம் ஆண்டு சிறப்புப் புத்தகக் காட்சியில் பார்வையாளர்களுக்கு கிடைத்த அரும்பெரும் வாய்ப்பாக அமையப்பெற்றுள்ளது.

தொடக்கவிழாவில் வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், சென்னை புத்தக சங்கமம் மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், அச்சக மேலாளர் க.சரவணன், முத்துகிருஷ்ணன், விழிகள் பதிப்பகம் வேணுகோபால் மற்றும் பல்வேறு பதிப்பகங்களின் பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர் தலைவர்

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கூறியதாவது:

உலகப்புத்தக நாளான ஏப்ரல் 23க்கு முன்னும் பின் னும் அய்ந்து நாள்களுக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (பெரியார் அறக்கட்டளை) மக்களிடையே புத்தகங்கள் பரவ வேண்டும், புத்தகங்கள் படிக்கின்ற பழக் கம் வழக்கமாக வேண்டும். அந்த புத்தகங்களை வாசிப்பதையும் நேசிப்பதையும் தாண்டி, சுவாசிப்பதாகக் கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, ஏராளமான புத்தகங்களை பயிற்றுவிக்கக் கூடிய, பழக்கிவைக்கக் கூடிய இந்த கண்காட்சி விற்பனையகத்தை ஒவ்வொரு ஆண்டும் பெரியார் அறக்கட்டளையாகிய பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனம் நடத்தி வருகிறது. 60 பதிப்பகத்தார்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.

50 விழுக்காடு தள்ளுபடி செய்து கொடுக்கின்ற காரணத்தால், குழந்தைகள், மாணவர்கள், இளை ஞர்கள், பல்வேறு தரப்பட்டவர்களும், பல்வேறு எண் ணம் உள்ளவர்களும், எல்லாக்கருத்து உடையவர்களும், எல்லாக் கொள்கை உடையவர்களும், கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவர்களும்கூட, இந்தப் புத்தகங்களை வாங்குகிறார்கள். படிக்கிறார்கள். பயன்பெறுகிறார்கள். வரும்போது சாதாரணமாக வந்து, திரும்பும்போது, ஒரு புத்தக மூட்டையோடு செல்லக்கூடிய ஓர் அற்புதமான புத்தக சந்தையாக இது இருக்கிறது.

எனவே, அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு உலகை என்ற புரட் சிக்கவிஞருடைய நடைமுறை இங்கே செயல் படுத்தப்படுகிறது.

கேப்டன் சுரேஷ்

இப்போது புத்தகம் படிப்ப தென்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. எப்படியாவது மக் களை மற்றும் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரேயொரு குறிக்கோளோடு, 50 விழுக்காடு தள்ளுபடி செய்து, ஒரு ஏசி அரங்கில் எல்லோரும் அவசியம் வந்து நேரத்தை ஒதுக்கி, புத்தகங்களை எப்படி யாவது வாங்கி படிக்கவேண்டும் என்கிற ஒரேயொரு குறிக்கோ ளுடன் இந்த சென்னை புத்ததகச் சங்கமம் அய்ந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது ஒரு பெரிய விஷயம். கண்டிப்பாக எல்லோருமே உபயோகப்படுத்தி, இங்கே வந்து புத்தகங்களை வாங்கி அனுபவிக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம்

இந்த நிகழ்ச்சியை நடத்து வதில் பெரியார் திடல் பெரு மைப்படுகின்றது. இதில் மிக வும் முக்கியமாக பாராட்டப் பட வேண்டியவர்கள் பதிப் பகத்தார். 50 விழுக்காடு தள்ளு படி செய்து கொடுக்கிறார்கள். அதனால் பலர் பயன்பட முடி கிறது. நான் ஒவ்வொரு ஆண் டும் சென்னை புத்தகச் சங்கம புத்தகக் காட்சி நடக்கின்றபோது புத்தகங்களை வாங்கி, எனக்கு தெரிந்த குழந்தைகளுக்கெல்லாம் கொடுப்பேன். நிறைய சிறிய பெரிய கதைகள் புத்தகங்கள் எல்லாமே. இதில் ஆண்டுதோறும் பார்வையாளர்கள் பயன் பெறு பவர்கள் அதிக அளவில் வருகிறார்கள் என்பது நிரம்ப பெருமையாக இருக்கிறது.

முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கு

சென்னைப் புத்தகச் சங்கமத்தின் அய்ந்தாம் ஆண்டு சிறப்புப் புத்தகக் காட்சியின் அரங்குகள் அனைத்தும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கில் அமையப் பெற்றுள்ளன.

புத்தகக் கொடைஞர்களுக்கான அரங்கு

புத்தகங்களை வாசித்து முடித்து, மற்றவர்களுக்குப் பயன்படவேண்டும் என்று புத்தகங்களை கொடையாக அளிக்க விரும்புவோருக்கென தனியே அரங்கு அமைக் கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றது.கோடை வெயி லின் தாக்கத்தை தணிக்க பழங்கள், தேநீர், காபி  விற் பனை அரங்கு, கரும்புச்சாறு உள்ளிட்ட உணவு விற் பனை அரங்குகள் அமையப் பெற்றுள்ளன.

‘விடுதலை’ அரங்கு

விடுதலை நாளிதழ், உண்மை மாதமிருமுறை வாழ்வியல் இதழ், பெரியார் பிஞ்சு சிறுவர் மாத இதழ், தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆங்கில பகுத்தறிவு மாத இதழ் ஆகிய இதழ்களுக்கான சந்தா செலுத்த தனியே அரங்கு அமையப்பெற்றுள்ளது.

பார்வையாளர்களுக்கான வசதிகள்

பார்வையாளர்களுக்கு வழிகாட்டும்வண்ணம்  சென்னைப் புத்தகச் சங்கமத்தின் சார்பில் அலுவலக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. சென்னைப் புத்தகச் சங்கமத்தின் சிறப்புப் புத்தகக்காட்சியில் இடம்பெற் றுள்ள பதிப்பகங்கள், அவை அமையப்பெற்றுள்ள அரங்குகள் என அரங்கின் முகப்பில் பட்டியல் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட அரங்கின் பல்வேறு பகுதிகளிலும் தாகம் தணிக்க குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. புத்தகங்களை விருப்பத்துக்கேற்றவாறு வாங்கிட, வங்கி அட்டைகள் மூலமாக பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட் டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நடமாடும் ஏடிஎம் மய்யம் நிறுவப்பெற்றுள்ளது.

இப்புத்தகக் காட்சி ஏப்ரல் 25 முடிய நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடை பெறு கிறது. அனுமதி இலவசம். குடும்பத்துடன் வாருங்கள்.

தொடர்புக்கு: 9444210999, 9003118455
044-26618161/62/63

www.chennaiputhagasangamam.com
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கினார்.

தமிழர் தலைவர், வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், கேப்டன் ஜே. சுரேஷ், காந்தி கண்ணதாசன், மக்கள் தொடர்பு அதிகாரி டி. சண்முகம் ஆகியோர் புத்தகங்களை பார்வையிடும் காட்சி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner