எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.21 பட்டமேற்படிப் பில் இட ஒதுக்கீடு மற்றும் நீட் தேர்வில் விலக்கு கோரி அரசு மருத்துவர்கள் 2ஆ-வது நாளாக போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக முதல்வருடன் சுகா தாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, நீட் தேர்வில் விலக்கு உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் (ஏப்.19) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், தர்ணா, பட் டினிப் போராட்டங்களை நடத்தினர். 2-ஆவது நாளான நேற்று, அனைத்து அரசு மருத்துவமனை களிலும் புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், 2 மணி நேரம் வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கங் களைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, எம்பிபிஎஸ் முடித்து டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறோம். 2 ஆண்டுகள் பணியாற்றினால் பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பதால் பலரும் அரசு மருத்துவர் களாக பணியாற்றி வருகின்றனர். இந்த இட ஒதுக்கீடு கிடைக்காவிட்டால், யாரும் அரசு மருத்துவமனை பணிக்கு வரமாட்டார்கள். எனவே, 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் நீட் தேர்வில் விலக்கு கிடைக்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இந்நிலையில், மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் மருத்துவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்க முயற்சி எடுத்து வருகிறோம். இது தொடர்பாக பிரதம ருக்கு முதல்வர் கடிதம் மூலம் வலி யுறுத்த உள்ளார் என்றார்.

அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன் கூறும்போது, சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மருத்துவர்கள் அனைவரும் புற நோயாளிகள் பிரிவை புறக் கணித்து 21-ஆம் தேதி (இன்று) போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பட்ட மேற்படிப்பு மாணவர்களும் இதில் பங்கேற்கின்றனர். அவசர சிகிச்சைகள் மட்டும் அளிக்கப் படும். மற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவரவர் போராட் டங்களை ஒருங்கிணைத்து நடத்து வார்கள் என்றார்.

மருத்துவர்கள் போராட்டத்தால் சென்னையில் உள்ள மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 50 ஆயிரம் புறநோயாளிகள் பாதிக்கப் படுவார்கள் என்று தெரிகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner