எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குளத்தில் மூழ்கடித்து விவசாயிகள் போராட்டம்

புதுக்கோட்டை, ஏப்.21- புதுக் கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழனன்று நடைபெற்ற போராட்டத்தில் மோடி யின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் மூழ்கடித் தும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக் கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆ-ம் தேதி ஒப்புதல் அளித் தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துநெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, கோட்டைக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திட்டத்தை செயல் படுத்த மாட்டோம் என்ற மத்திய, மாநில அமைச்சர்களின் உறுதிமொ ழியை ஏற்றும், பள்ளி மாணவர்களின் தேர்வைக் கணக்கில் கொண்டும் கடந்த மார்ச் 9ஆ-ம் தேதிபோராட்டத்தை தற் காலிகமாக ஒத்திவைப்பதாக போராட் டக் குழுவினர் அறிவித்தனர். அதே நேரத்தில், நல்லாண்டார்கொல்லை மற் றும் வடகாட்டில் போராட்டம் தொடர்ந் தது. மாவட்ட ஆட்சியரின் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த இடங் களிலும் போராட்டம் விலக்கிக் கொள் ளப்பட்டது.ஆனால், விவசாயிகளிடம் உறுதியளித்ததற்கு மாறாக, மத்திய அரசு நெடுவாசல் உள்ளிட்ட நாடு முழு வதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார் பன் திட்டத்திற்கு தனியார் நிறுவனங் களுடன் கையெழுத்திட்டது. இது தமி ழக விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களிடமும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக விவசாயிகள் பல் வேறு நூதன வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஒன்பதாவது நாளாக வியாழனன்று நடைபெற்ற போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிரா மங்களில் இருந்து நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

இதில், ஹைட்ரோ கார்பன் திட்டத் திற்கு அனுமதி அளித்தமத்திய அரசை கண்டிக்கும்வகையில் பிரதமர் மோடி யின் உருவப்பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். நெடுவாசல் கடை வீதியில் வைத்து மோடியின் உருவ பொம்மையை வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் மோடியின் உருவ பொம் மையை மூழ்கடித்து மோடிக்கு எதி ராகவும், ஹைட்ரோகார்பன் திட்டத் திற்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இந்தப் போராட்டம் அந்தப் பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner