எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சர்வதேச கழுத்து, முதுகுத் தண்டு ஆராய்ச்சி சங்கத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.ராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கழுத்து, முதுகுத் தண்டு ஆராய்ச்சி சங்கம்  கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. அதன்பின் அமெரிக்கா, அய்ரோப்பா, ஆசிய பசிபிக் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அமெரிக்கா பிரிவில் 620 பேரும், அய்ரோப்பா பிரிவில் 320, ஆசிய பசிபிக் பிரிவில் 470 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சங்கத்தின் மாநாடு, ஜப்பானில் உள்ள கோபே நகரத்தில் நடந்தது. இதில், சங்கத்தின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.ராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டார். இந்த சங்கத்துக்கு இந்தியர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கோவை கங்கா மருத்துவமனையின் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் விபத்தியல் சிகிச்சை துறை தலைவரான ராஜசேகர், சர்வதேச எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் விபத்தியல் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவர் எஸ்.ராஜசேகரன் கூறியதாவது:

சர்வதேச கழுத்து, முதுகுத் தண்டு ஆராய்ச்சி சங்கத்தின் தலைவர் பதவியில் ஓராண்டு இருப்பேன். சங்கத்தின் சர்வதேச மாநாட்டை இந்தியாவில் நடத்த இருக்கிறேன். 2018ஆம் ஆண்டு மார்ச்சில் டில்லியில் மாநாடு நடத்தப்படும். இதில், 22 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்பார்கள். ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும்.

ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குத் தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
இவ்வாறு மருத்துவர் ராஜசேகரன் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner