எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை கற்களால் தாக்கி விரட்டியடிப்பு


ராமேசுவரம், மார்ச் 20 கடந்த 5-ஆம் தேதி ராமேசு வரத்தை சேர்ந்த டிட்டோ என் பவரது படகில் சென்ற மீன வர்கள் 6 பேர் இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதி யில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப் பாக்கி சூடு நடத்தினர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீன வர் பிரிட்ஜோ குண்டு பாய்ந்து இறந்தார். மற்றொரு மீனவர் சரோன் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தை கண் டித்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடந்த 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அறப்போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மத்திய அமைச் சர்கள் பேச்சு வார்த்தை நடத் திய பின்பு, போராட்டத்தை கைவிட்டனர். மேலும் வேலை நிறுத்தம் செய்து வந்த அவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நேற்று முன்தினம் ராமேசு வரம் பகுதியை சேர்ந்த மீன வர்கள் சுமார் 500 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று காலை அவர்களில் சிலர் நடுக் கடலில் மீன் பிடித்து கொண்டி ருந்தனர். அப்போது அங்கு குட்டி கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை பார்த்து எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மீனவர்கள்அவசர அவசரமாக கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை இழுத்துக் கொண் டிருந்தனர்.

அப்போது இலங்கை கடற் படையினர் மீனவர்களை கற் களால் தாக்கி விரட்டியடித்தனர். மேலும் வலைகளையும், படகு களில் இருந்த மீன் பிடி சாத னங்களையும் சேதப்படுத்தினர். இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் அவசரமாக கரைக்கு திரும்பினர்.
இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்த சம்பவம் குறித்து அதிகாரியிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner