எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பூந்தமல்லி, மார்ச் 20  பூந்தமல்லியில், குடி பழக்கத் தால், சமுதாயத்தில் தங்களுக்கு மதிப்பு இல்லை என்பதை உணர்ந்த நரிக்குறவர்கள், 'இனி மது அருந்த மாட்டோம்' என, உறுதிமொழி எடுத்துக் கொண் டனர்.

பூந்தமல்லி நகராட்சி, அம் பேத்கர் நகரில், நரிக்குறவர் களுக்கு என, தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கு, 100க்கும் மேற்பட்டோர், குடும் பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களில் பலர், தினசரி மது அருந்திவிட்டு வருவதால், அவர் களுக்குள் தகராறு ஏற்படுகிறது.

மோதல் ஏற்பட்டு, ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொள் கின்றனர். ஒரு சிலர், மது அருந்திவிட்டு, தொழிலுக்கு செல்லாமல், எந்நேரமும் போதையிலேயே விழுந்து கிடக்கின்றனர். இதனால், சமுதாயத்தில், தங்களுக்கு மரி யாதை இல்லை என்பதை உணர்ந்த நரிக்குறவர்கள், அதை போக்கும் விதமாக, குடிப் பழக்கத்தை அறவே விட்டு விட முடிவு செய்தனர்.

நேற்று காலை, ஆண், பெண் என, 100க்கும் மேற்பட் டோர், 'இனி மது அருந்த மாட்டோம்' என, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதை தொடர்ந்து, உறுதிமொழி பத்திரத்தில் ஒவ்வொருவரும், கையெழுத்து மற்றும் பெரு விரல் ரேகை வைத்தனர்.

உறுதிமொழிக்கு பின், மது அருந்திவிட்டு வருவோரை, எங்கள் பகுதிக்குள் அனுமதிக்க மாட்டோம்; அவர்களை, சில மாதங்கள் ஒதுக்கிவைப்போம்' என, நரிக்குறவர்கள் தெரிவித் தனர். நரிக்குறவர்களின் இச் செயல், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner