எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசைக் கண்டித்து தமிழர் தலைவர்  ஆசிரியர் தலைமையில் எழுச்சியுடன்  நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜன.12 சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற ஊரில் அகழ்வாராய்ச்சிப்பணிகள் நடைபெற்ற போது திராவிடர் நாகரிகம் குறித்த அரிய ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன.

கீழடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ் வாராய்ச்சியில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிந்துச் சமவெளி நாகரிகமான திராவிடர் நாகரிகத்தின் தொன்மை மிகுந்த வரலாறு குறித்த ஆதாரமானவை கீழடி ஆய்வில் வெளிவருகின்ற நிலையில், கீழடி யில் அகழ்வாராய்ச்சிப்பணிகளை முடக்கிய மத்திய அரசைக்கண்டித்தும், கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து நடத்துவதை விரைவு படுத்திட வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில்  இன்று (12.1.2017) முற்பகல் 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிங்கார வேலர் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் தோழர்களால் வானதிர ஒலிக்கப் பட்டன.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து கண்டன உரையாற்றி னார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் கண்டன ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றி னார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, தலைமைச் செயற் குழு உறுப்பினர் க.பார்வதி, மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி செயலாளர் பொழிசை கண்ணன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பேராசிரியர் மங்கள முருகேசன், விழிகள் பதிப்பக வேணு கோபால், ஆவடி பகுத்தறிவு பாசறை கோபால்,  வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் வி.பன்னீர்செல்வம், தலைமைக் கழக சொற்பொழிவாளர் செ.தமிழ் சாக்ரட்டீஸ், சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை மற்றும் தென்சென்னை, வடசென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங் களிலிருந்து பொறுப்பாளர்கள், தோழர்கள் ஏராள மானவர்கள்  கலந்து கொண்டார்கள்.

தென்சென்னை மாவட்டம்

மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,  மாவட்ட துணைத் தலைவர்கள்  - டி.ஆர்.சேதுராமன், சி.செங்குட்டுவன், துணைச் செயலாளர்கள்- கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், இளைஞரணி துணைத் தலைவர் மு.ஈழமுகிலன், துணைச் செயலாளர் - இரா.பிரபாகரன், கு.செல்வேந்திரன், அடையாறு மணித்துரை, அ.செல்வராசு, தரமணி மஞ்சநாதன், நுங்கை வெற்றிவீரன், பி.அஜந்தா, சைதை தென்றல், செஞ்சி ந.கதிரவன், சி.தணிகாசலம், மு.பவானி, வி.வளர்மதி, அ.பாபு, ச.துணைவேந்தன், நெடுங்கிள்ளி, மயிலை பாலு, பொறியாளர் ஈ.குமார்

ஆவடி மாவட்டம்

மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, தாமரைப்பாக்கம் கனகசபை, திருநின்றவூர் தலைவர் ரகுபதி, பெரியார் மாணாக்கன், உடுமலை வடிவேல், க.கலைமணி, பூவை செல்வி, மதுரவாயல் பாலமுரளி, கொரட்டூர் இரா.கோபால் நெடுங்கிள்ளி, ஜெயந்தி, முத்துக்கிருஷ்ணன், கி.மணிமேகலை, பல்லவன் நகர் வேலு, வை.கலையரசன்

தாம்பரம் மாவட்டம்

மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் மோகன்ராஜ், குணசேகரன்,  கமலக்கண்ணன், திராவிடர் தொழிலாளர் கழகம் ம.இராசு, நாகரத்தினம், பழனி பாலு,  தருமலிங்கம்  பகுத்தறிவாளர் கழகம் விஜய் ஆனந்த், கு.சோமசுந்தரம், மகாலிங்கம், விடுதலை நகர் ஜெயராமன், சண்.சரவணன், கரைமாநகர் சுரேஷ், கு.ஆறுமுகம், மு.மணிமாறன், எஸ்.ரமேஷ், எஸ்.சுரேஷ், ஏசா, அய்யப்பன், முருகன், அர்ஜுன்

கும்மிடிப்பூண்டி மாவட்டம்

மாவட்டத் தலைவர் புழல் தஆனந்தன், மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர் இரவி,  மேனாள் மாவட்டத் தலைவர் செ.உதயக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.நாகராஜன், புழல் நகரத் தலைவர் இரா.சோமு, செயலாளர் அறிவுமானன், ஒன்றிய செயலாளர் ஜனாதிபதி, ஓவியர் ஜனாதிபதி, திராவிடர் மகளிர் பாசறை செல்வி,  புழல் ஏழுமலை, மீஞ்சூர் ஒன்றியத் தலைவர் கெ.முருகன், பொன்னேரி நகரத் தலைவர் வெ.அருள், செயலாளர் மு.சுதாகர், பாலு, சோழவரம் ஒன்றியத் தலைவர் கஜேந்திரன், செயலாளர் சக்கரவர்த்தி

வடசென்னை மாவட்டம்

மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.வே.சு.திருவள்ளுவன், வெ.மு.மோகன்,  துணை செயலாளர் கி.இராமலிங்கம், மகளிரணிச் செயலாளர் ச.இ.இன் பக்கனி, இளைஞரணித் தலைவர் புரசை அன்புச் செல்வன், பாலமுருகன், பகுத்தறிவாளர் கழகம் தங்க.தனலட்சுமி,  ந.இராசேந்திரன், தி.செ.கணேசன், புதுவண்ணை செல்வம், வண்ணை விக்னேசுவரன், ஏழுகிணறு கோ.கதிரவன், தா.கருத்தோவியன், கு.ஜீவா, ஆ.வெங்கடேசன், எ.மணிவண்ணன், கவிஞர் நரிப்பையூர் அரிமா, ஜெ.கோபி, பெரம்பூர் இரகுபதி, பெரியார் திடல் சுரேஷ், அருள், வேலவன், ஆனந்த், தமிழ்க்குடிமகன்

மகளிரணி

சி.வெற்றிச்செல்வி, பெரியார் களம் இறைவி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, பொன்னேரி செல்வி, வடசென்னை மகளிர் பாசறை த.மரகதமணி, ம.யுவராணி, ம.செம்மொழி, பெரியார் பிஞ்சு மகிழ், பெரியார் வலைக்காட்சி கலைமதி உள்பட ஏராளமானவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner