எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் மருந்தியல் கல்லூரியின் தொண்டறம்
புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம்

பள்ளிவிடை, ஜன.9 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் பெரியார் மருத்துவக் குழுமமும் ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவ மனையும் இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் 08.01.2017,  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி யளவில் பள்ளிவிடை கிராமத்தில் நடைபெற்றது.

இம்மருத்துவ முகாம் பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தலைமையில், ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத் துவமனையின் பெண்கள் பரிசோதனை மய்ய மருத்துவர் யாமினி அவர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் பெண் களுக்கான மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் கண் டறியும் பரிசோதனையையும்,

திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மருத்துவர் இர. முனவர் சுல்தானா அவர்கள் தலைமையில் பொது மருத்துவ முகாமும் நடைபெற்றது. இப்பொது மருத்துவ முகாமில் கிராம மக்களுக்கு மருந்து மாத் திரைகளை பெரியார் மருந் தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இலவசமாக வழங்கினர்.

இம்மருத்துவ முகாமில்  பள்ளிவிடை திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் ச. பிச்சை மணி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் ப. பாலசுப்ரமணியன், பேரா. பி. கவிதா, ஆய்வக பணியாளர்  தனலெட்சுமி மற்றும் எஸ். செபஸ்தியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஊர்ப் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இம்மருத் துவ முகாமில்  123 பேர் பயன டைந்தனர்.

62 பெண்களுக்கு மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ச. ராஜேஷ்  மற் றும் இலால்குடி மாவட்ட திராவிடர் கழகத்தினர் முகா மிற்கான ஏற்பாடுகளை செய் திருந்தனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner