எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவது ஏப்ரல் முதல் ரத்து  : முகவர்கள் விலகல்

வேலூர், ஜன.9 தமிழகம் முழு வதும் வருகிற ஏப்ரல் மாதம் முதல் ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவது முற்றிலும் ரத்து செய்யப்பட உள்ளது. இதையொட்டி 254 முகவர்கள் விலகி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 2 கோடியே 20 லட்சம் பேர் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். இவர்களுக்கு பொதுவிநியோக திட்டம் மூலம் அரிசி இலவச மாகவும், கோதுமை, பருப்பு, சர்க்கரை, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை மானிய விலையிலும் வழங்கப் பட்டு வருகிறது.

ஒரு சிலிண்டர் வைத்திருப் போருக்கு மட்டும் 2 லிட்டர் மண்ணெண்ணெய்யும், சிலிண் டர் இணைப்பு இல்லாதவர் களுக்கு 10 லிட்டர் மண்ணெண் ணெய்யும் வழங்கப்படுகிறது. ஆனால் சிலிண்டர்கள் வைத் துள்ளவர்களில் சிலர் கூட ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்கி அதை கள்ளச்சந்தையில் விற்று வருகின்றனர். அதே போல் ரேஷன் கடைகளில் உள்ள சில ஊழியர்களும் கள் ளத்தனமாக மண்ணெண்ணெய் விற்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தமிழகத் திற்கு மாதந்தோறும் பெட் ரோலிய துறை மூலம் 64 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது 29 கிலோ லிட்டராக ஆக திடீரென குறைக்கப்பட்டது. தற்போது படிப்படியாக ஒவ் வொரு மாவட்டத்திலும் வழங் கப்பட்டு வந்த மண்ணெண் ணெயின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதனால் தமிழகம் முழு வதும் 254 முகவர்கள் விலகி உள்ளனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்குவது முற்றிலும் ரத்து செய்யப்பட உள்ளது என்ற  தகவல் வெளி யாகியுள்ளது.

இதுகுறித்து மண்ணெண் ணெய் முகவர்கள் கூறியதாவது: ‘தமிழகத்தில் மண்ணெண் ணெய்யின் அளவை மத்திய அரசு குறைத்து வருகிறது. இதனால் மாவட்டந்தோறும் கணிசமாக மண்ணெண்ணெய் விநியோகம் குறைத்துள்ளனர். ஆனால் குஜராத் மற்றும் ஆந்திராவில் நூறு சதவீதம் மண்ணெண்ணெய் தொடர்ந்து வழங்குகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே ரேஷனில் மண் ணெண்ணெய் வழங்கப்பட மாட்டாது என நாங்கள் கேள் விப்பட்டோம். ஆனால், அந்த முடிவை தற்காலிகமாக அவர் கள் நிறுத்தி வைத்தனர். தற் போது வரும் ஏப்ரல் முதல் ரேஷனில் அடியோடு மண்ணெண் ணெய் விநியோகம் நிறுத்தப் படும் என உயர் அதிகாரிகள் வாய்மொழியாக தெரிவித்துள் ளனர். அதற்கு பதிலாக, குடும் பத் தலைவரின் வங்கி கணக் கில் மானியம் செலுத்தவும் மத் திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.

படிப்படியாக மண்ணெண் ணெய் அளவை குறைத்துள்ள தால் எங்களுக்கு (முகவர்கள்) வேலை இல்லாமல் போய் விட்டது. இதனால் தமிழகத்தில் 254 முகவர்கள் கடந்த சில மாதங்களில் விலகிச் சென்று விட்டனர். மற்ற முகவர்களும் விரைவில் விலக உள்ளனர்’ என்றனர். மண்ணெண்ணெய் விநியோகம் ரத்து தகவல் ஏழை மற்றும் நடுத்தர மக் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner