எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 9- தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:-

தமிழகம் இதுவரை கண் டிராத அளவிற்கு வறட்சியின் கொடுமையால் கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக ஏறத் தாழ 125 விவசாயிகள் தற் கொலையாலும் அதிர்ச்சியா லும் உயிர்ப் பலியாகியுள்ளனர். இது குறித்து உடனடியாக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல் வத்தை நேரில் சந்தித்து வலி யுறுத்தினேன்.

அதுவரை தூங்கி வழிந்த அ.தி.மு.க. அரசு அதன்பிறகே ஆய்வுக்குழுவை அறிவித்தது. அதன் மூலமாக விவசாயிக ளின் உயிர்ப்பலிகள் தடுக்கப் படும் என்ற நம்பிக்கை ஏற்பட் டது. அந்த நம்பிக்கையைத் தகர்த்துத் தவிடு பொடியாக்கி யுள்ளனர் தமிழக அமைச்சர்கள்.

ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் வெறும் கண்துடைப்பு நாடகம் நடத்துகிறார்கள் என விவசாயிகள் குமுறுகிறார்கள். அவர்களின் வேதனையைத் துடைக்க வேண்டிய அமைச் சர்களோ, வேளாண்குடிகளையே ஒட்டுமொத்தமாக இழிவு செய் யும் வகையில் பேசியுள்ளனர்.

அமைச்சர் ஒருவர் ‘‘தமிழ கத்தில் விவசாயிகள் யாரும் வறட்சியால் உயிர் இழக்க வில்லை. வயது முதிர்வாலும், உடல் உபாதையினாலுமே உயிர் இழந்துள்ளனர். அவர்கள் வறட்சியால் இறந்து போனார் கள் என எதிர்க் கட்சிகள் பொய்ப்பிரச்சாரம் செய்து எங்களின் ஆட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர்'' என ஆண வத்துடன் பேசியிருக்கிறார். மற்றொரு அமைச்சரும் இதே போல கருத்து தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் 100-க்கும் அதி கமான விவசாயிகள் இறந்து போன அதிர்ச்சி செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்து, தேசிய மனித உரிமை ஆணை யம், தாமாக முன் வந்து ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது. விவசாயிகள் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து 6 வாரத்துக்குள் விரி வான அறிக்கை தாக்கல் செய் யவேண்டும் என தமிழக அர சின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது.

அதுபோலவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷென் கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு பிறப் பித்த உத்தரவில், “விவசாயி களைப் பாதுகாக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த பதில் மனுவை 4 வாரத் திற்குள் தாக்கல் செய்ய வேண் டும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயர்நீதிமன்றமும் தேசிய மனித உரிமை ஆணையமும் இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் இதற்குப் புறம்பாகப் பேசி விவசாயிக ளின் கடும் கோபத்திற்கு ஆளா கியிருப்பது சட்ட மீறல் மட்டு மின்றி, நீதி மன்ற அவமதிப்புச் செயலுமாகும். 2011ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் விவ சாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, சாகுபடி என்பது சாகும் படி யாகி வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 விவசாயிகள் இந்த பாதிப்பினால் மரண மடைந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த உண்மைகளைத் தொடர்ந்து மறைத்து, மழுப்பி வரும் அ.தி.மு.க. அரசு தான் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது.

விவசாயிகளின் தற்கொலை களையும், அதிர்ச்சி மரணங்க ளையும், முதுமையினால் ஏற் பட்ட மரணங்கள் என்றும், சொந்தப் பிரச்சினையால் ஏற் பட்டவை என்றும், கள்ளக்கா தல் விவகாரத்தில் தற்கொலை என்றும் இழிவுபடுத்தும் போக்கை இந்த அரசு தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது.

காவிரி நீர்த் தேவை குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய அரசின் குழுவிடம் மாநில அரசு சார்பில் சமர்ப்பித்த அறிக் கையில்கூட, விவசாயிகளின் தற்கொலைகளையும் அதிர்ச்சி மரணங்களையும் மறைத்து, அவர்களின் குடும்பத்திற்குக் கிடைக்க வேண்டிய இழப்பீடு களுக்கு வாய்ப்பின்றிச் செய்து வசவுகளுக்கு ஆளாயினர்.

கடந்த ஒரு மாதத்தில் மர ணமடைந்தவர்களில், நாகை மாவட்டம், கீழ்வேளூர் கடம் பன்குடியைச் சேர்ந்த விவசாயி வீரமணி, கடந்த 30.12.2016இல் தற்கொலை செய்து கொண்ட இவருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார் கள்.

அதுபோலவே, செம்பனார் கோவில் சேமங்கலம் கிராமத் தைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமார் அதிர்ச்சி மரணமடைந் திருக்கிறார். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்தைச் சேர்ந்த ராம மூர்த்தி என்பவரின் மனைவி கீர்த்திகா 22.12.2016 அன்று அதிர்ச்சி மரணமடைந் தார். இவையெல்லாம் வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற் பட்ட மரணங்களா? இவர்க ளைப்போல பல உதாரணங்க ளைக் காட்ட முடியும்.

மறைந்த முதல்-அமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்தார்கள் என 400க்கும் மேற்பட்டவர்களைப் பட்டியலிட்டுள்ளார்களே, அவர்களில் வயது முதிர்ச்சி யானவர்களே கிடையாதா? அவர்களுக்கு உடல் உபாதை களே ஏற்படவில்லையா?

மரணமடைந்தவர்களை யெல்லாம் மொத்தமாக அம் மையார் ஜெயலலிதாவுக்காக இறந்தவர்கள் எனப் பட்டிய லிட்டு அவர்களின் குடும்பத்தா ருக்கு நிதி உதவி அறிவித்துள்ள ஆளுங் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விவசாயிகளின் தற்கொலைகளையும் அதிர்ச்சி மரணங்களையும் கொச்சைப் படுத்துவது, தமிழக விவசாயப் பெரு மக்களையே மொத்தமாக வஞ்சிக்கும் செயலாகும்.

இதயத்தில் ஈரம் சிறிது மின்றி அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் உதிர்க்கும் சருகு போலக் காய்ந்த வார்த்தை களைக் கட்டுப்படுத்த வேண் டிய கடமையும், பொறுப்பும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இருக்கிறது.

எனினும், அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பு என்பதும் அமைச்சரவை ஒற்றுமை என்பதும் குறைந்து குலைந்து போயிருக்கும் நிலையில், அவர் தான் என்ன செய்வார்,

பாவம்! தமிழகத்தில் தொடர்ந்து பெருகி வரும் விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் குறித்த உண்மை விவரத்தை முழுமையாக வெளியிடுவது டன், இனியும் மரணங்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும், நிவா ரண ஏற்பாடுகளையும் போர்க் கால அடிப்படையில் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

-இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner