எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முதியோர் உதவித்தொகைக்கு
10 ரூபாய் நாணயங்கள்  

சென்னை, ஜன.8 முதியோர் உதவித்தொகையை 10 ரூபாய் நாணயங்களாக வழங்க அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

உயர் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட பிறகு ரிசர்வ் வங்கி, பொதுத் துறை மற்றும் தனியார் வங்கி களுக்கு புதிய ரூபாய் நோட்டு களை வழங்கியது. ஆனால், அஞ்சலகங்களின் தேவைக்கேற்ப போதிய அளவில் ரூபாய் நோட் டுகள் வழங்கவில்லை.

இதனால், தமிழகத்தில் உள்ள 97 அஞ்சலக ஏடிஎம்களிலும், போதிய அளவுக்கு உரிய நேரத் தில் புதிய நோட்டுகள் வழங்க முடிய வில்லை. இருப்பினும், கடந்த 50 நாள்களாக இருப்பில் உள்ள பணத்தை வைத்து வாடிக் கையாளர்களை அஞ்சலகங்கள் சமாளித்துள்ளன.

நகர்ப்புற அஞ்சலகங்கள், அருகே உள்ள வங்கிகளில் ஓரளவுக்கு தேவையான பணத் தை பெற்று தங்களின் வாடிக்கை யாளர்களை சமாளித்து வந்தன. ஆனால், கிராமப்புறங்களில் வங்கிகளிடமிருந்து தேவையான பணம் கிடைக்கவில்லை.

அதேபோல், புதிய 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கிடைக்காமலும் வாடிக்கை யாளர்கள் அவதிக்குள்ளாகினர். அத்துடன், 90 சதவீத அஞ்சலகங்களுக்கு புதிய ரூ.500 நோட்டுகள் வழங்கப்பட இல் லை. இதனால், மாற்று ரூபாய் நோட்டுகள் வழங்குவதிலும் அஞ்சலக நிர்வாகங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ கூறியதாவது:

வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை வழங்க வங்கிகளை சார்ந்திருக்கும் சூழ்நிலை இருந்தது. அதுபோல், முதியோர் உதவித்தொகை வழங்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் கோரி இருந்தோம்.

இந்நிலையில், இந்த மாதம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க இந்திய ரிசர்வ் வங்கியிடம், போதிய அளவுக்கு மாற்று ரூபாய் நோட்டுகளை தந்து உதவுமாறு கோரியிருந்தோம்.

10 ரூபாய் நாணயங்கள்: அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், முதியோர்களுக்கு ரூ.1,000 அளவிலான 10 ரூபாய் நாணயங்கள் மூலம் இந்த மாதம் உதவித்தொகை வழங்க உள்ளோம் என்றார் அவர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner