எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வெள்ள அபாயத்துக்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறும் மக்கள் சென்னை சூளைபள்ளம் பகுதியில் காலியாகும் வீடுகள்

சூளைப்பள்ளம், நவ. 2- காணு நகர் பகுதிகளை ஒட்டியுள்ள அடையாறு பகுதியில் இது வரை தூர்வாரப் படாததால் வெள்ள அபாயத்துக்கு பயந்து பலர் வீட்டை காலி செய்து விட்டனர். இதனால், பல வீடுகளில் ‘வாடகைக்கு’ என்ற பலகைகள் தொங்குகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆ-ம் தேதி வரை விடாமல் பெய்த அடை மழையால் சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

செம்பரம் பாக்கம் ஏரியும் திறந்து விடப்பட்டதால் குன்றத்தூர், நந்தம் பாக்கம், மணப்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சூளைபள்ளம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகு திகள் பெரும் சேதத்தை சந்தித் தன. இதில் 20 அடிவரை தண் ணீர் சூழ்ந்த எம்.ஜி.ஆர். நகர் சூளைப் பள்ளம், காணுநகர் ஆகிய பகுதிகளும் அடங்கும்.

வெள்ளம் தந்த படிப் பினைக் குப் பிறகும் அந்தப் பகுதிகளில் இதுவரை முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப் படவில்லை. எனவே, நடப்பாண்டும் பெரு மழை பெய்தால் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாத மில்லை என்பதால் அப்பகுதி யில் பெரும்பாலானோர் வீட்டை காலி செய்து வருகின்றனர். இதனால், சூளைப்பள்ளம் பகு தியில் பெரும் பாலான வீடு களில் ‘வாடகைக்கு’ போர்டு கள் தொங்குகின்றன.

இதுகுறித்து சூளைப்பள்ளம் நேரு தெருவைச் சேர்ந்த வாசுகி கூறுகையில், “கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின்போது சூளை பள்ளம் பகுதியை ஒட் டியுள்ள அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வீடுகள் அனைத்தும் மூழ்கின. சுமார் 20 அடி வரை வெள்ளம் சூழ்ந்ததால் பலர் உடைமை களை இழந்தனர். நான் இந்தப் பகுதியில் கடந்த 30 ஆண்டு களாக வசித்து வருகிறேன். எனக்கு தெரிந்து ஒரே ஒரு முறை மட்டும்தான் சூளைப் பள்ளத்தை ஒட்டியுள்ள அடை யாறு ஆற்றை தூர்வாரியுள்ளனர்.

பெரு மழைக்குப் பிறகும் இந்தப் பகுதியில் எந்த முன் னெச்சரிக்கை நடவடிக்கைக ளும் மேற்கொள்ளப் படவில்லை. கடந்த ஆண்டு ஏற்பட்ட மழைவெள்ளத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட பலர், நடப் பாண்டும் வெள்ளம் வந்தால் உடைமைகளை இழக்க நேரி டும் என்று பயந்து வீட்டை காலி செய்து வருகின்றனர். சொந்த வீடு வைத்துள்ளவர்கள் வேறு வழியில்லாமல் இந்தப் பகுதியில் குடியிருக்கிறோம்”. இவ்வாறு அவர் கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner