எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேலம் மாநகர திராவிடர் கழக செயலாளர் அரங்க. இளவரசனின் தந்தை கடந்த 2.4.2019 செவ்வாய்  அன்று  அதிகாலை மறைந்தார். நேற்று (13.4.2019) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அரங்க.இளவரசன் இல்லத்துக்கு சென்று  அவர் தந்தையின் படத்துக்கு மரியாதை செய்து அரங்க.இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்தார். கழக பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் அ.ச.இளவழகன், மாவட்ட துணை செயலாளர் பா.வெற்றிசெல்வன், ச.வெ.இராவணபூபதி, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் ராஜு, பரமசிவம், பொறியாளர் செல்வராஜ், மகளிரணி சுஜாதா, தமிழ்ச்செல்வன், சன்னியாசி, குண்டு, மொட்டையன் மற்றும் கோட்ட தி.மு.க.அவைத்தலைவர் மு.சதாசிவம், செயலாளர் பழனிச்சாமி, துணை செயலாளர் அ.இளங்கோவன், எஸ்.கே.சுப்ரமணியன், மாணிக்கம், அய்யாவு, சபரி, கிருஷ்ணசாமி, கே.ஏ.முனுசாமி மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

 

 

Banner
Banner